தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன்.இவர் தற்பொழுது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.மடோன் அஸ்வின் இயக்கத்தில் பேண்டஸி கதை அம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.இந்தத் திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களை இருப்பதனால் அதற்கான பிரமோஷன் பணிகள் படும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இந்த திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென் பிரம்மாண்டமாக ஜூலை இரண்டாம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் தவிர ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிக் கொண்டே இருக்கும் புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கின்றார்.இந்த திரைப்படத்தின் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கின்றார்.இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகின்றார்.இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த திரைப்படம் மேலும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இவர் தற்பொழுது சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார்.சைலண்டாக சில உதவிகளையும் செய்து கொண்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் குட்டி ஆண் சிங்கம் ஒன்றை தத்தெடுத்து உள்ளார்.மூன்று வயது ஆகும் ஷேரு என்ற ஆண் சிங்கத்தை 6 மாதத்திற்கு தத்தெடுத்து உள்ளார் சிவகார்த்திகேயன்.அவர் செய்துள்ள இந்த உதவியை பூங்கா நிர்வாகம் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறது.
வண்டலூர் பூங்காவில் 2000க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருக்கின்றன.அவற்றைப் பொதுமக்கள் சுற்றி பார்ப்பதோடு தத்தெடுக்கும் திட்டத்தையும் பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.அந்த வகையில் அங்கு உள்ள விலங்குகளை தத்தெடுப்பவர்கள் அதற்கான பராமரிப்பு செலவுகளை அளிக்க வேண்டும் அவர்கள் அந்த விலங்குகளுக்கு செலவழிக்கும் தொகைக்கும் வரி விளக்கும் அளிக்கப்படுகிறது.நடிகர் சிவகார்த்திகேயன் இதற்கு முன் யானை புலி போன்ற விலங்குகளை தத்தெடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்த வகையில் இந்த முறை சிங்க குட்டி ஒன்றை தத்தெடுத்து உள்ளார்.