ஆப்பிளில் இருக்கும் கலோரியின் அளவு
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் ஆப்பிளில் இருக்கும் கலோரிகள் பற்றி பார்க்க இருக்கிறோம்.அனைவருக்கும் பொதுவாக பழம் வகைகள் மிகவும் பிடிக்கும் ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் மற்றும் உடலில் ஏற்படும் ஆரோக்கியம் பிரச்சனைகள் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.
இந்த வகையில் ஒரு ஆப்பிளில் இருக்கும் கலோரியின் அளவு எவ்வளவு.ஆப்பிள் பழம் என்றால் சிறு குழந்தைகள் பெரியவர்கள் வரை சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அனைவரும் அதிகம் விரும்பி சாப்பிடுவது ஆப்பிள் பழம் தான்.140 கிராம் எடையுள்ள ஒரு பழத்தில் 90 கலோரிகள் இருக்கின்றது.100 கிராம் எடையுள்ள ஒரு பழத்தில் 59 கலோரிகள் இருக்கின்றது.ஒவ்வொரு ஆப்பிளும் ஒவ்வொரு எடை கொண்டது.அதனால் அதனை தோராயமாக கணக்கிட முடியாது.உடம்பிற்கு எந்த விதத் தீங்கும் மற்றும் பிரச்சினையும் இல்லாத பலத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் வயிற்றுப்போக்கு போன்றவைகளை குணப்படுத்த உதவியாக இருக்கின்றது.
ஆப்பிளில் இருக்கும் நார்ச்சத்து காரணமாக ஆப்பிள் பழத்தில் உள்ள சர்க்கரைகள் கொழுப்பில் சேர்க்கப்படாமல் இருப்பதனால் உடல் உறுதியாக இருக்க உதவியாக இருக்கிறது.இதனால் ஆப்பிள் ஜூஸ் மட்டும் அருந்தாமல் முழு ஆப்பிளையும் சாப்பிடுவது மிகவும் முக்கியமானதாகும்.ஸ்டாபெரி, ஆரஞ்சு போன்ற பழங்களை விட ஒரு ஆப்பிளில் 100 கிராமுக்கு அதிக கலோரிகள் இருக்கின்றது.மேலும் வாழைப்பழம் மற்றும் மாம்பழத்தை விட ஆப்பிள் பழத்தில் குறைவான கலோரிகள் இருக்கின்றது.
ஆப்பிள் பழத்தில் இருக்கும் சத்துக்கள்
- இரும்பு
- கொழுப்பு
- புரோட்டின்
- பாஸ்பேட்
- சர்க்கரை
- சோடியம்
- பெக்டீன்
- பொட்டாசியம்
- மேலிக் யூரிக் அமிலம்
- வைட்டமின் பி1
- வைட்டமின் பி2
- வைட்டமின் சி
மேலும் இந்த ஆப்பிள் பழத்தில் இருக்கும் ரசாயன கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணைந்து செயல்படுகின்றது.ஆர்கானிக் கலவை இரும்பு சத்து எளிதில் உடலை வலுவாக்க உதவியாக இருக்கிறது.
கருப்பு உலர் திராட்சை பயன்கள் | Black Dry Grapes Benefits in Tamil |
ஆப்பிள் பழத்தின் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தி
உடலில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த ஆப்பிள் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி உதவியாக இருக்கிறது.இது உடலுக்கு தேவையான 14 சதவீதம் அத்தியாவசிய வைட்டமின்கள் இருப்பதனால்.ஆப்பிள் பழத்தினை தினமும் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
நார்சத்து
ஆப்பிள் பழத்தில் பெக்டின் என்று கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருப்பதினால்.ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் நீங்கிவிடும்.
சர்க்கரை பிரச்சனை
ஆப்பிள் பழத்தில் இருக்கும் பைட்டோன் நியூட்ரியன்ட்ஸ் மட்டும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவியாக இருக்கின்றது.
மூளை நோய்
ஆப்பிள் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் மூளை நோய் ஏற்படாமல் தடுக்க உதவியாக இருக்கிறது.
நீரிழிவு நோய்
ஆப்பிள் பழத்தில் குறைந்த அளவில் கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதனால் நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் மிகவும் நன்மையை தரும்.
ரத்த சோகை
ரத்த சோகை இருப்பவர்கள் ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் விரைவில் குணமடைந்து விடும்.மேலும் ரத்த ஓட்ட சுழற்சி சீராக இயங்க உதவியாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே..
நோனி பழம் பயன்கள் | Benefits of Noni In Tamil |
கொய்யா பழம் நன்மைகள் மற்றும் தீமைகள் |
பேரிச்சம்பழம் எப்போது சாப்பிட வேண்டும் |