தமிழகத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய்.இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.அந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் தயாரித்து வருகின்றனர்.இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.இதனால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.தற்பொழுது இந்த திரைப்படத்தில் விஜய் அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டு வருகின்றது என்ற தகவல் கசிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை கோபிசென்ட் மல்லினேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.இதனை அடுத்து மீண்டும் தெலுங்கு இயக்குனரா விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றார்கள்.இந்த நிலையில் விஜயின் அடுத்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தது.
ஆனால் இந்த தகவல் உறுதியாக வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.அதற்கு இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திரைப்படம் ஏஜிஎஸ் இன் 25வது திரைப்படம் என்றும் சர்வதேச தரத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.இவர்கள் இருவரும் புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்திற்காக இணைய உள்ளார்கள்.மேலும் இந்த திரைப்படத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது இதனால் வெங்கட் பிரபு கோபமடைந்து தன்னுடைய உதவி இயக்குனர்களை அழைத்து உங்களில் யாரோ ஒருவர் தான் இந்த தகவல் வெளியாகி இருக்கும் எனவே இனி யாரும் வீட்டிற்கு போகக்கூடாது அலுவலகத்திலேயே தங்கி விடுங்கள் என்று ஆர்டர் போட்டு விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.