Thirukadaiyur Temple | திருக்கடையூர் கோவில் வரலாறு
மிருகண்ட முனீஸ்வரர் அவரின் மனைவி புத்திரர் பேரு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தார்கள் அவர்கள் பக்தி மெச்சி இறைவன் அவர்கள் தோன்றிய ஆயிரம் ஆண்டுகள் வாழும் துற்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்ட மிருகண்டு தம்பதியினர் 16 வயது மகனை வேண்டுமென்று வரம் கேட்டார்கள்.
மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கி வந்தார்.இவருக்கு 16 வயது நடக்கும்போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டே இருக்கு கூறினார்கள்.சிவபெருமானே அவரின் ஆயுளை காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக வணங்கி வரும் போது திருக்கடையூர் வந்து அடைந்தார் அவர் திருக்கடையூர் தளம் வந்த பொழுது அவருடைய ஆயுள் முடியும் நாள் நெருங்கிவிட்டது.
எமன் தன்னுடைய பணியை முடிக்கும் போது பாச கயிற்றை மாறு கண்டெய்னர் மீது வீசினார்.எமனை கண்டு அச்சம் அடைந்த மார்கண்டையர் வழிபட்டு கொண்டிருந்த லிங்கத்தை ஆற தழுவி கொண்டார் எமனும் பாச கயிற்றில் லிங்கத்தையும் சேர்த்து வீசினார்.
இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனை காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனை சூழகித்ததால் கொண்டு காலனுக்கு காலனாக காலசம்ஹார மூர்ச்சியாக தோன்றினார்.பின் மூதேவி பிரம்மா மகாவிஷ்ணு ஆகியுரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்பித்து அருள் புரிந்தார் என்று கூறுகின்றனர்.சிவபெருமானின் எட்டு வீர செயல்களும் காலனை கடிந்த இந்த வீர செயல்களில் ஒன்று.
திருக்கடையூர் கோவில்
இந்த கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கிலும் ராஜ கோபுரங்கள் இருந்தாலும் மேற்கில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரம் இதனுடைய பிரதான வாயிலாக இருக்கிறது.இது கருவறையில் உள்ள அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார்.கருவறை சுற்றி இருக்கும் பிரகாரத்தில் முருகன்,லட்சுமி,சோமஸ்கந்தர்,நடராஜர்,வில்வனேஸ்வரர்,பைரவர்,பஞ்சபூத லிங்கங்கள்,சூரியன்,அகத்தியர்,சப்த கன்னியர்கள்,63 நாயன்மார்கள் போன்ற சந்நிதிகள் இந்த கோவிலில் இருக்கின்றது.இந்தக் கோவிலில் நவகிரக சந்நிதி இல்லை.
இறைவன் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் காலசம்ஹார மூர்த்தியின் செப்பு சிலை இருக்கின்றது.காலன் காலடியில் தலைகீழாக விழுந்து கிடக்கின்றான் கால சம்ஹார மூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைப்பது போன்று இருக்கின்றது.மார்க்கண்டேயர் அருகில் கூப்பிய கருத்துடன் நிற்கின்றார்.பிறகு எமனுக்கு மன்னிப்பு கொடுத்த சிவபெருமான் எமனை தன் சந்நிதிக்கு எதிரே இருக்க செய்திருக்கிறார் எமன் வாகனத்துடன் காரம் கோப்பியவர் நிற்கும் எமனுக்கு சிறு கோவில் இருக்கின்றது.எமனுடைய பாச கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும் மேனியில் தழும்பும் இருக்கின்றது.
திருக்கடையூர் கோவில் செல்லும் வழி | Thirukadaiyur Temple Timings
மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
காலை – 6.30AM – 1.00PM
மாலை – 4.30PM – 8.30PM
முகவரி:
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்
திருக்கடையூர்-609311
நாகப்பட்டினம் மாவட்டம்
திருக்கடையூர் அருகில் உள்ள கோவில்கள்
அனந்தமங்கலம் |
தில்லையாடி |
திருவிடைகழி |
தேவானூர் |
தரங்கம்பாடி |
திருக்கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரர் கோவில் கடவூர் மயானத்தில் இருக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலையும் தரிசித்து பின் அருகில் இருக்கும் மற்ற கோவில்களுக்கும் சென்று வர வேண்டும்.
அனந்தமங்கலம் ராஜகோபால பெருமாள் கோவில்:
திருக்கடையூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ராஜகோபால பெருமாள் கோவில் இந்தக் கோவிலில் இருக்கும் த்ரிநேத்ர பஞ்சமுக ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர் ஆவார்.
தில்லையாடி பெரிய பிரகாரம் பெரிய கோபுரம்:
திருக்கடையூரில் இருந்து கிழக்கு பக்கம் திருவிடைகழி செல்லும் பாதையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் சிவன் கோவில் பெரிய பிரகாரம் பெரிய கோபுரம் அமைந்திருக்கிறது.சுயம்புலிங்க வடிவில் இருக்கும் இறைவனை திருமால் வழிபட்டு இருந்தார்.
திருவிடைகழி முருகன் கோவில்:
தில்லையாடியிலிருந்து மேற்கு பக்கம் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருவிடைகழி திருவிசைப்பா பாடல் பெற்ற முருகன் கோவில்.இந்தக் கோயிலில் மூலவர் திருகாமேஸ்வரர் ஆயினும் பிரதான மூர்த்தியாக திகழ்ந்தவர்.இந்த கோவிலில் இருக்கும் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாட பெற்றிருக்கிறது.
தேவானூர் விசாலாட்சி உடனுறை விஸ்வநாத ஸ்வாமி ஆலயம்:
தில்லையாடிக்கு அருகில் அமைந்திருக்கும் தேவானூரில் இருக்கும் விசாலாட்சி உடனுறை விஸ்வநாத ஸ்வாமி ஆலயம் இருக்கின்றது.இந்த கோவிலில் இருக்கும் ஞானகுரு பகவான் சன்னதியும் பார்த்து வழிபட வேண்டிய சிறப்புகளில் ஒன்று இங்குள்ள ஞான குரு பகவான் இந்திர வழிபட பெற்றவர்.
தரங்கம்பாடி மாசிலாநாதர்:
திருக்கடையூரில் இருந்து தென்கிழக்கு பக்கம் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அளப்பூர் என்ற தேவார வைப்பு தளம் இருக்கிறது.கடல் அலைகள் மோதி மோதி மிகவும் சிதிலம் அடைந்திருக்கும் சிவாலயத்தின் மூலம் மாசிலாநாதர்.கந்த சஷ்டி நாளில் திருவிடைகழி முருகன் சூரசம்காரம் செய்யும் கோவில் இதுதான்.