நாய் கனவில் வந்தால் என்ன பலன் | Naai Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!! வாழ்வில் ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். தூங்கும் போது கனவுகள் வரும். நமக்கு வரும் கனவுகளில் நல்லது நடப்பது போல் வரலாம்,கெட்டது நடப்பது போலும் வரலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
கனவில் பல உயிரினங்கள் வரும் அதிலும் குறிப்பாக வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு,நாய்,பூனை போன்ற உயிரினங்கள் நம் கனவில் வரும்.அப்படி நம் கனவில் நாய் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நாய் கனவில் வந்தால் என்ன பலன்
பொதுவாக நாய் உங்கள் கனவில் வந்தால் பிறரால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.நீங்கள் ஒரு செயலை செய்யப் போகிறீர்கள் என்றால் பெரியவரின் உதவி இல்லாமல் வந்து செயலை உங்களால் முழுவதும் செய்ய முடியாது. ஆனால் பிறரின் உதவி நீங்கள் தேடாமலே உங்களுக்கு அவர்களே வந்து உதவி செய்வார்கள்.
வளர்ப்பு நாய் கனவில் வந்தால் என்ன பலன்
வளர்ப்பு நாய் கனவில் வந்தால் நன்மைகள் உண்டாகும். நீங்கள் ஒரு புதிய செயலை செய்வதற்கு முயற்சி எடுத்தால் அந்த செயலில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் ஏதும் தொடங்க நினைத்து இருந்தாலும் இப்பொழுது தொடங்கலாம் உங்கள் தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.
மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
வெள்ளை நாய் கனவில் வந்தால்
வெள்ளை நிற நாய்க்காணவில் வந்தால் உங்கள் வாழ்வில் நல்லது நடக்கும்.வெள்ளை என்றாலே தூய்மையை குறைப்பது அதனால் வெள்ளை நாய் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடைபெறும்.உங்களுடன் இருப்பவர்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு எந்த ஒரு துரோகமும் செய்யாமல் நேர்மையாக இருப்பார்கள்.
கருப்பு நாய் கனவில் வந்தால் என்ன பலன்
கருப்பு நிற நாய் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை உணர்த்துகிறது. அதாவது நீங்கள் தொழில் செய்து கொண்டிருந்தால் அந்த தொழிலில் லாபங்கள் எதுவும் கிடைக்காமல் நஷ்டங்கள் கிடைக்கும். உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு துரோகம் கூட செய்வார்கள் அதனால் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
இறந்த நாய் கனவில் வந்தால்
நாய் இறப்பது போல் கனவு கண்டால் புதிதாக யாருடன் பழகினாலும் கவனமுடன் பழக வேண்டும் கவனமுடன் பேச வேண்டும்.எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.புதிய நபர்களுடன் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
கனவில் நாய் கடித்தால் என்ன பலன்
நாய்கள் வீட்டில் செல்லப்பிராணியாக வழங்கப்பட்டு வருகிறது. மனிதர்களிடமும் மிகவும் அன்பாக இருக்கும் ஐந்து அறிவு உயிரினமாகும். நாய் கடிப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு வரும் ஆபத்துகளை முன்கூட்டியே உணர்த்துவதற்காக அந்த கனவு உங்களுக்கு வருகிறது.
நாய்கள் கடிப்பது போல் கனவில் வந்தால் சனி பகவானின் தாக்கத்தால் உங்களுக்கு ஆபத்துகள் வரவிருக்கிறது.அதனால் நீங்கள் அருகில் உள்ள கோயில்களில் வணங்குவது நல்லது.நாய்கள் கடிப்பது போல் கனவில் வந்தால் உடல் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
கன்று குட்டி கனவில் வந்தால் |
சிறுத்தை கனவில் வந்தால் என்ன பலன் |
கருடன் கனவில் வந்தால் என்ன பலன் |
ஆண்கள் கனவில் வந்தால் என்ன பலன் |