Pambu Kanavil Vanthal | பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்
வணக்கம் நண்பர்களே.!! தூங்கும் போது கனவு வருவது என்பது வழக்கமான ஒன்றாகும் அந்த கனவிற்கு பல பலன்களும் உண்டு பாம்பு கடிப்பது,பாம்பு துரத்துவது அல்லது பாம்பை பார்த்து ஓடுவது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்
பாம்பு கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் ஏதேனும் துன்பங்கள் நடக்கும் ஆனால் அந்த துன்பங்களை எளிதில் முடித்து விடுவீர்கள்.உங்கள் மனதில் துன்பம் கொடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களை நீங்கள் சரி செய்து விடுவீர்கள்.பாம்பு கனவில் வந்தால் நீங்கள் இதனால் வரை குலதெய்வ வழிபாடுகள் செய்யாமல் இருப்பீர்கள் அதனால் உங்கள் குலதெய்வம் பாம்பின் வடிவமாக உங்க கனவில் வரும் விரைவில் குலதெய்வத்தை வழிபடுவது நல்லது.
நல்ல பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்
நல்ல பாம்பு கனவில் வந்தால் உங்களை எச்சரிக்கை செய்கிறது அதாவது நண்பர்கள் உறவினர்களும் இருந்து ஒரு பிரச்சனைகள் ஏற்பட இருக்கிறது அது தொழில் சம்பந்தமான பிரச்சனை கூட இருக்கலாம் அல்லது குடும்ப சம்பந்தமான பிரச்சினை கூட இருக்கலாம் அதனால் யாரிடம் பேசினாலும் மிகவும் கவனமாக பேச வேண்டும்.எந்த ஒரு செயலை செய்தாலும் அந்த செயலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மலைப் பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்
மலைப்பாம்பு கனவில் வந்தால் உறவினர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருப்பார்கள். சிறிது காலத்திற்கு கஷ்டம் ஏற்படும். தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்றால் புத்திசாலித்தனமான யோசனைகளை செய்து தொழிலில் முன்னேற வேண்டும். நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு உங்களுக்கு நடக்கும்.தெரியாதவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இரண்டிற்கும் மேற்பட்ட பாம்பு கனவில் வந்தால்
இரண்டிற்கும் மேற்பட்ட பாம்பு கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான செய்திகள் உங்களைத் தேடி வரும் அதாவது உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். ஏற்கனவே அன்புக்குரியவர்கள் இருந்தால் அவர்களிடம் நல்ல புரிதல் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். செல்வங்கள் அதிகரிக்கும்.
பாம்பு கடிப்பது போல் கனவில் வந்தால்
பாம்பு கடிப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு ஒரு தொந்தரவு வந்தால் அதிலிருந்து வெளிவராமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பீர்கள் அதனால் எந்த ஒரு செயலை செய்தாலும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும். உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது.
பாம்பை கொல்வதைப் போல் கனவில் வந்தால்
பாம்பை கொள்வது போல் கனவில் வந்தால் உங்களுக்கு இதனால் வரை ஒரு மிகப்பெரிய பிரச்சனை இருக்கும் அந்த பிரச்சனையிலிருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்று உங்களுக்கு ஒரு யோசனை கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றத்தை அடைந்து நீங்கள் இருக்கும் இடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள்.எந்த ஒரு செயலாக இருந்தாலும் தைரியமாக செய்வீர்கள்.நீண்ட காலத்துக்கு முன் செய்ய நினைத்திருந்த செயலை இப்போது செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள்.
பாம்பு தண்ணீரில் இருப்பது போல் கனவில் வந்தால்
பாம்பு தண்ணீரில் இருப்பது போல் கனவில் வந்தால் உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்களை ஒரு பிரச்சினையில் மாட்டி விட முயற்சி செய்வார்கள் அதனால் நீங்கள் அனைவருடமும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.உங்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்கும் அந்த குறிக்கோளை நோக்கி சென்றாள் அதில் வெற்றி கிடைக்கும்.
பாம்பு துரத்துவது போல் கனவில் வந்தால்
உங்கள் வாழ்க்கையில் மிகவும் நீங்கள் வருத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் அந்த வருத்தத்தில் இருந்து எவ்வாறு வெளிவருவது என்று நாளுக்கு நாள் துன்பம் அடைந்து கொண்டே இருக்கிறீர்கள்.
Read Also:
மகாலட்சுமி கனவில் வந்தால் என்ன பலன்
மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன்