Homeதமிழ்புல்லட்ல 299 கிலோ மீட்டர் வேகமா.! எப்புட்ரா.! டிடிஎஃப் வாசன் நடிக்கும் முதல் பட பர்ஸ்ட்...

புல்லட்ல 299 கிலோ மீட்டர் வேகமா.! எப்புட்ரா.! டிடிஎஃப் வாசன் நடிக்கும் முதல் பட பர்ஸ்ட் லுக் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

தமிழ் சினிமாவைப் போல் யூடியூப் பிரபலங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றனர்.அந்த வகையில் யூடியூப் சேனல் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.அவர்களில் ஒருவர் தான் டிடிஎஃப் வாசன் ஆவார்.இவருடைய யூடியூப் சேனலில் பைக் ரைடு செய்யும் வீடியோக்களை பதிவிட்டு 2கே கிட்ஸின் ஃபேவரட் யூடியூபராக மாறிவிட்டார்.இவர் யூட்யூபில் எந்த அளவிற்கு பிரபலம் ஆனாரோ அதே அளவிற்கு சர்ச்சையிலும் சிக்கினார்.சர்ச்சைக்குரிய யூடியூப் வீடியோக்களால் இவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்த சம்பவங்கள் அதிகம் அரங்கேறியது.

அது மட்டும் இல்லாமல் கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது இவருடைய ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுக்கு சவால் விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் டி டி எஃப் வாசன்.இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த டிடிஎப் பார்சல் தற்பொழுது அதிரடியாக சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.இதன்படி அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் முதல் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

TTF Vasan

இன்று இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது.இதன்படி இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு மஞ்சள் வீரன் என்று பெயரிட்டு இருக்கின்றனர்.இந்த திரைப்படத்தை செல்அம் என்பவர் இயக்குகிறார்.இந்த திரைப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கின்றது.தற்பொழுது வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் சூலாயுதம் புல்லட்டில் வீலிங் செய்து இருக்கின்றார் டிடிஎப் ஹாசன்.

TTF Vasan

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கும் ஹைலைட் என்னவென்றால் 299 கிலோமீட்டர் வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம் என்று கூறியிருக்கின்றனர்.இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.அந்தப் போஸ்டரில் புல்லட் 299 கிலோமீட்டர் வேகம்மா எப்படிடா என்ற கமெண்ட் செய்து வருகின்றார்கள்.அதுமட்டுமின்றி இந்த போஸ்டர் ரஜினியின் அண்ணா திரைப்படத்தின் போஸ்டரை பார்த்து எடிட் செய்ததாக கூறி வருகின்றனர்.அது மட்டும் இல்லாமல் அண்ணாத்தை பட போஸ்டரில் ரஜினி இடது கையில் அருவாள் உடன் வயிற்றில் வருவார் என்பது குறிப்பிட்டு இருக்கின்றனர்.

- Advertisement -
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR