Asafoetida In Tamil | பெருங்காயம் பயன்கள்
Asafoetida In Tamil:வணக்கம் நண்பர்களே.!! பெருங்காயம் என்பது நம் வீட்டில் தினமும் சமைக்கும் உணவுகளில் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். பெருங்காயத்தில் பெரும் நன்மைகள் உள்ளது. பெருங்காயத்தில் உள்ள நன்மைகள் தீமைகள் மற்றும் பெருங்காயம் எப்படி உணவுகளில் எடுத்துக் கொள்வது என்பதை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பெருங்காயம்
Asafoetida In Tamil Pronounce:பெருங்காயம்
பெருங்காயம் in english:Asafoetida
பெருங்காயம் அனைவரும் வீடுகளில் உணவுகளில் சமைக்கும் பொழுது பெருங்காயத்தை சேர்த்துக் கொண்டுதான் சமைப்பார்கள். பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் மற்றும் பலன்கள் உள்ளது.ஒரு நல்லது இருந்தால் கெட்டதும் இருக்கும் அதேபோல் பெருங்காயத்திலும் நல்லதும் இருக்கிறது கேட்டதும் இருக்கிறது அதனால் பெருங்காயத்தை அளவுடன் பயன்படுத்தவும்.
பெருங்காயம் நன்மைகள்
பெரும்பாலானவர்கள் பெருங்காயம் நம் உணவில் சுவையை கூட்டுவதற்கு தான் சேர்க்கப்படுகிறோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆஸ்மா இருக்கவர்கள் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரி ஆகிவிடும்.மூச்சுப் பிரச்சனை,சளி,நுரையீரல் போன்ற பிரச்சனைகள் ஏதேனும் இருந்தாலும் உணவில் பெருங்காயத்தை சேர்த்துக் கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக சரி ஆகிவிடும்.
பால் பெருங்காயம் பயன்கள்
நாம் பயன்படுத்தும் பெருங்காயத்தை விட பால் பெருங்காயம் தான் உடலுக்கு மிகவும் நல்லது. பால் பெருங்காயம் கலப்படம் அதிகம் இல்லாமல் செய்யப்படும் பெருங்காயம் ஆகும்.பால் பெருங்காயத்தில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. இயற்கை மருந்துகள் தயாரிக்கப்படுவதில் இந்த பால் பெருங்காயம் சேர்க்கப்படுகிறது.
பெருங்காயம் பயன்கள்
பெருங்காயம் மலச்சிக்கலை நீக்கி குடல் புழுக்களை அளிக்கும் சக்தி வாய்ந்தது. நுரையீரல், சுவாசக் கோளாறுகள் மார்பு வலி தொடர் இருமல் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து விடும்.பெருங்காயத்தில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது இதனால் நாம் சமைக்கும் உணவுகளில் பெருங்காயம் சேர்ப்பது நல்லது.
பெருங்காயம் தீமைகள்
பெருங்காயத்தில் எந்த அளவுக்கு நல்லது இருக்கிறதோ அந்த அளவுக்கு கெட்டதும் இருக்கிறது.பெருங்காயத்தை அதிக அளவில் பயன்படுத்தும் போது தலைவலி,வாந்தி போன்ற பிரச்சனைகள் வரலாம். ரத்தப்போக்கு கோளாறு இருப்பவர்கள் பெருங்காயத்தை பயன்படுத்தக் கூடாது. பெருங்காயம் அதிக அளவு சேர்த்துக் கொண்டால் ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பெருங்காயம் சாப்பிடும் முறை
நம் தினமும் சமைக்கும் போது பெருங்காயத்தை நாம் சமைக்கும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பெருங்காயத்தை அளவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
பெருங்காயம் மருத்துவ குணங்கள்
பெருங்காயத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாக அடங்கியுள்ளது. பெருங்காயம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.வயிற்று வலி,வயிற்றுப்புண்,குடற் புண் போன்றவற்றைகளை பெருங்காயம் சாப்பிடுவதன் மூலம் சரி செய்து விடும்.
Read Also:
சுண்டைக்காய் தீமைகள் மற்றும் பயன்கள்