ஃபஹத் ஃபாசில் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார்.இவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.அதுமட்டுமில்லாமல் தேசிய திரைப்பட விருதையும் பெற்றிருக்கிறார்.நான்கு கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று ஃபிலிம் பெயர் விருதுகள்,தென்னகை விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இவர் நடிகராக நடித்தாலும் இவருடைய வில்லன் நடிப்பு மட்டும் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தது.இவர் தமிழ் சினிமாவில் இரண்டாவது முறையாக வில்லனாக நடித்து உள்ளார்.இதுவரை இவர் வில்லனாக நடித்த திரைப்படங்கள் மொத்தம் மூன்று.ஒன்று மலையாள திரைப்படமான கும்பலங்கி நைட்ஸ். இரண்டாவது தெலுங்கு திரைப்படமான புஷ்பா.மூன்றாவது தமிழ் திரைப்படமான வேலைக்காரன்.தற்பொழுது இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நான்காவது முறையாக வில்லனாக நடித்து உள்ளார்.தமிழ் சினிமாவில் இவர் இரண்டாவது முறையாக மாறி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இவர் முந்திய திரைப்படங்களில் வில்லனாக நடித்த பொழுது அந்த திரைப்படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று கூறுவார்கள்.ஆனால் தற்பொழுது இந்த மாமன்னன் திரைப்படத்தில் எப்படி நடித்திருப்பார் என்பது நமக்குத் தெரியவில்லை.இவர் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.அந்த திரைப்படத்தில் இவருக்கு ஒரு பிசினஸ்மின் சூழ்ச்சி மட்டுமே கதாபாத்திரமாக கொடுக்கப்பட்டது.இதனால் இவருடைய நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அவருக்கு அந்த திரைப்படத்தில் பெரிதாக காட்டவில்லை என்று சொல்லலாம்.
மலையாளத்தில் வில்லனாக நடித்து வெளிவந்த கும்பலங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இவருக்கு ஏற்ற கதாபாத்திரம் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளான ஒருவர் போல் இருந்தது.அதாவது மனநலம் பாதிப்படைந்த ஒருவன் கெட்ட குணத்தை கொண்டதாக இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்.இந்த திரைப்படத்திலும் இவருடைய நடிப்பை வெளிப்படுத்தவில்லை.
அனைவரும் வில்லனாக சிறிது ஏற்றுக்கொண்ட படம்தான் புஷ்பா.இந்தத் திரைப்படத்தில் இவர் மொட்டை அடித்து பழிவாங்கும் குணம் கொண்ட ஒரு ரத்த வெறி பிடித்த வில்லனாக நடித்திருப்பார்.புஷ்பா திரைப்படத்தில் பல வில்லன்களில் ஒருவராக இருந்து இந்த திரைப்படத்தின் கடைசி நேரத்தில் முக்கிய உள்ளனாக மாறி இருப்பார் ஃபஹத் ஃபாசில்.
தற்பொழுது வரும் சினிமாக்களில் வில்லன்கள் பெரிய உடலை வைத்துக் கொண்டு முரட்டுத்தனமாக தோற்றத்தை கொண்டவராக இருப்பார்கள்.சில வில்லன்கள் ஒரு நடிகரின் நடிப்பால் மக்களை பேசப்படும் ஒருவராக இருப்பார்கள்.தன்னுடைய நடிப்பாற்றலை வெறும் கண்களில் வெளிப்படுத்தக் கூடியவர் தான் ஃபஹத் ஃபாசில்.தற்பொழுது இவர் நடித்து வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் தன்னுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல் மற்றும் பதவி வெறி கொண்ட ஒருவராக நடித்திருப்பார்.இதனால் இவர் தற்பொழுது வில்லன்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வருகிறார்.