சிறுநீரக நோய்
சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.உடலில் இருக்கும் தண்ணீரை வடிகட்டுகிறது.இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் உதவியாக இருக்கிறது.மேலும் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவியாக இருக்கிறது.சிறுநீரகத்தில் நோய்கள் ஏற்படுவதால் இந்த செயல்பாடுகள் அனைத்தும் பாதிப்படைந்து சிறுநீரகங்கள் வேலை வேலை செய்யாமல் நின்று விடுகிறது.கழிவு பொருட்கள் மற்றும் திரவங்கள் உடலில் அதிகம் சேருவதனால் உயிருக்கு ஆபத்தான நிலைமைக்கு கொண்டு சேர்க்கிறது.சிறுநீரக நோயைக் குறிக்கும் அறிகுறிகளை நீங்கள் மேலும் தெரிந்து கொள்வதற்கு உங்களுடைய மருத்துவரை அணுக வேண்டும்.
சிறுநீரக நோய் வகைகள்
சிறுநீரக நோய்கள் இரண்டு வகைகளாக பிரித்துள்ளனர்.
- நாள்பட்ட சிறுநீரக நோய்
- கடுமையான சிறுநீரக நோய்
சிறுநீரக நோய் அறிகுறிகள்
சிறுநீரக செயல்பாடு மெதுவாக சேதப்பட்டு ஆரம்பகால நாட்பட்ட சிறுநீரக நோய் அறிகுறிக்கு கொண்டு செல்கிறது.
- குறைந்த அளவு சிறுநீர் வெளியிடுதல்
- கை மற்றும் கால்கள் வீக்கம் ஏற்படுதல்
- மூச்சு திணறலை ஏற்படுத்துதல்
- தூக்கமின்மை
- வாந்தியை ஏற்படுத்துதல்
- வறட்சியான தோல்
- பசியை குறைத்தல்
- தசைகள் பிடிப்பு
1 வது நிலை சிறுநீரக நோய் அறிகுறிகள்
இது மிகவும் லேசான நிலையில் அறிகுறிகளையும் சிக்கல்களையும் அனுபவிக்காமல் இருக்க வைக்கும்.சீரான உணவு வழக்கமான உடற்பயிற்சி மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதன் மூலம் பயன்படுகிறது.நீரிழிவு நோய் இருந்தால் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
2 வது நிலை சிறுநீரக நோய் அறிகுறிகள்
இது லேசான வடிவத்தைக் கொண்டிருக்கும். சிறுநீரகங்கள் மற்றும் புரதத்திற்கு உடல் ரீதியான சேதத்தை வெளிப்படையாக இருக்கும். இந்த நிலையை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் ரத்த கோளாறுகள் இதய நோய் மற்றும் வீக்கம் உள்பட நோய்கள் வளர கூடும்.
3 வது நிலை சிறுநீரக நோய் அறிகுறிகள்
இந்த நிலையில் முதுகு வலி அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல் கால் மற்றும் கை கால் வீக்கங்கள் போன்றவை குறிக்கும். இந்த நிலை உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
4 வது நிலை சிறுநீரக நோய் அறிகுறிகள்
இந்த நிலையில் இருந்தால் எலும்பு நோய் ரத்த சோகை மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும்.இது உங்களுடைய ஆரோக்கியத்தை குறைக்கவும் ஆயுளை குறைக்கின்றது.எனவே உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
5 வது நிலை சிறுநீரக நோய் அறிகுறிகள்
இந்த நிலையில் இருந்தால் முற்றிலும் சிறுநீரகங்கள் செயலிழந்து விடும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்,வாந்தி,தோல் அரிப்பு, மார்பு வலி மற்றும் பல நோய்களை ஏற்படுத்தும்.இந்த நிலையில் இருந்தால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே..