Homeதமிழ்நாடுதிருச்சியில் 3 ரவுடிகள் பிரியாணி கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி செய்தவர்கள்...

திருச்சியில் 3 ரவுடிகள் பிரியாணி கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி செய்தவர்கள் கைது

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்த எட்வர்டு மகன் ஜோஸ்வாஸ் என்பவர் ஆவார்.இவர் சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் இருக்கும் ஒரு வணிக வளாகம் எதிரே தள்ளுவண்டி கடையில் பிரியாணி வியாபாரம் செய்து வருவார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவருடைய கடைக்கு வந்த மூன்று பேர் மது குடிக்க ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று ஜோஸ்வானிடம் கேட்டார்கள்.ஆனால் ஜோஸ்வா பணம் தர மறுத்ததால் மூன்று பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றார்கள்.இதனால் அவர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்ததால் மூன்று பேரும் தப்பி ஓடி விட்டார்கள்.

Untitled design 2023 07 03T111857.818

- Advertisement -

இது குறித்து ஜோஸ்வா மலைக்கோட்டை போலீஸ் இடம் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.இதில் பணத்தைப் பறிக்க முயன்றது ஜீவா நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற கோழி சுரேஷ்,கீழ தேவ ஆனந்தம் வீர முத்து நகரை சேர்ந்த ஆண்ட்ரூஸ்,மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் இருக்கும் பகுதியைச் சேர்ந்த சையது முஸ்தபா ஆகியோர் என்று தெரியவந்தது.இதனை தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் மலைக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.பிறகு அவர்களிடம் இருந்த ஒரு கத்தியை கைப்பற்றினார்கள் அவர்கள் மூன்று பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் அவர்கள் மூன்று பேரும் ரௌடிகள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR