நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அமைந்துள்ள மொளசி சுள்ளிக்காடு பகுதியில் சசிகுமார் (30) என்பவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார். சசிகுமாரின் மனைவி விகாஷினி (25) இவர்கள் 10 மாத குழந்தை உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் இரவு சசிகுமாரின் மனைவி பிகாசினி தனது குழந்தைக்கு வீட்டின் வாசலில் உட்கார்ந்து உணவு ஊட்டிக் கொண்டிருந்தார்.
பின்பு கை கழுவுவதற்காக வீட்டின் வெளியே இருக்கும் வாஷ்பேசனுக்கு கை கழுவச் சென்றுள்ளார் அப்பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து விகாஷினியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி விட்டு அவர் கழுத்தில் இருந்தா சுமார் 13 பவுன் தங்கச் சங்கிலி பறித்து வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி குதித்து அருகே உள்ள காட்டுக்குள் ஓடிவிட்டார்.
அதிர்ச்சியில் விகாஷினி சத்தம் போட்டு உள்ளார் விகாஷினியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து செயினை பறித்து சென்ற நபரை காட்டுக்குள் தேடி பார்த்து உள்ளனர்.அந்த நபர் கிடைக்காததால் விகாஷினி மொளசி காவல் நிலையத்தில் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார்.புகாரின் பெயரில் காவலர்கள் செயினை பறித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.இந்த செயல் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.