விஜய் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது.இந்த படம் ரசிகர்களுக்கு முழு திருப்தியை அளிக்கவில்லை.
தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வந்தார்.இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், கௌதம் மேனன், பிரியங்கா மோகன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் இருந்து நடிகர் விஜயின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நான் ரெடி என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. தற்பொழுது வரை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது.இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் வெளியிடும் பொழுது இந்த படத்தின் வெளியிட்டு தேதியையும் பட குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
கடந்த ஆறு மாதம் காலமாக இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முழு சூட்டிங் முடிவடைந்துள்ளது என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையில் வெளியிடப்பட இருப்பதால் படத்தின் போஸ்டர் பிரமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.படத்தின் சூட்டிங் முடிவடைந்து விட்டதால் படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.