நாமக்கல் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளூர் அரசு கல்லூரியில் சுஜிதா என்ற பெண் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சுஜிதாவின் தந்தையார் முருங்கப்பட்டியில் கோழி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சுஜிதா செமஸ்டர் தேர்வு எழுதி இருந்தார்.பெரியார் யூனிவர்சிட்டியின் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் அதில் சுஜிதா இரண்டு பாடங்களில் தோல்விய டைந்து விட்டதாக கூறப்படுகிறது.
தேர்வில் தோல்வியடைந்த சுஜிதா மனம் உடைந்து சோர்வாக காணப்பட்டார் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஷம் அறிந்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.சுஜிதா விஷமறிந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தீவிர சிகிச்சையில் இருந்த சுஜிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் சுஜிதாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ராசிபுரம் காவலர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சுஜிதா உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.