Homeதமிழ் கட்டுரைகள்ஆதித்த கரிகாலன் வரலாறு | Aditya Karikalan History in Tamil

ஆதித்த கரிகாலன் வரலாறு | Aditya Karikalan History in Tamil

ஆதித்த கரிகாலன் வரலாறு | Aditya Karikalan History in Tamil

கரிகால சோழன் வரலாறு

நம் நாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவர் தான் கரிகால சோழன்.இவர் முற்கால சோழர்களின் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர்.கரிகால சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன்.இவர் தந்தையின் பெயர் இளஞ்சட்சென்னி ஆவார்.இவருக்கு திருமாவளவன் மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப் பெயர்கள் இருக்கிறது.தனக்கு ஒப்பாரும் இல்லை தனக்கு மிக்காரம் இல்லை என்று புகழ்பெற்றவர்.

சோழகுலத்தை ஒரு குரலில் அரசியலில் இருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தவர்.பிற்கால சோழ குலத்தை தன் முன்னோர்கள் அண்டா ஆட்சி பகுதியில் இருந்து விரிவு படுத்தினார்.கரிகாலன் அழகான பேருக்குரிய தேர்வுகளை பெற்றிருந்த இளஞ்சேட்சென்னி மகன் ஆவார்.கரிகாலன் என்பதற்கு கருகிய கால உடையவன் என்று பொருள்.இவருக்கு இளம் வயதில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இந்த பெயர் வழங்கப்பட்டது.

- Advertisement -

கரிகால சோழன் திருச்சிக்கு அருகில் உள்ள உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர்.இவர் ஆட்சி காலத்தில் காவிரிப்பம்பட்டினம் துறைமுக நகரமாக திகழ்ந்து இருந்தது.இவர் உழவு தொழிலை ஊக்குவித்து பல நீர் பாசன திட்டங்களை உருவாக்கினார்.உழவுத் தொழிலில் ஊக்குவித்தது போன்று கைத்தொழில்களையும் ஆதரித்து வந்தார்.நடன கலையை போற்றி இவருடைய ஆட்சி காலத்தில் கிராம பொருளாதாரம் நகர பொருளாதாரமாக  வலிமை பெற்று இருந்தது.

Aditya Karikalan Wife Name

கரிகால சோழன் தொலைநோக்குடன் சிந்தித்து சோழர்களின் ஒப்பற்ற அரசை வழங்கி வந்தார்.இவருடைய தந்தை உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார் சிறுவயதில் இவர் தனக்குரிய அரசனை இழந்து தன் மாமன் பாதுகாப்பில் மறைந்து வாழ்ந்து வந்தார்.இவர் இளமை காலத்தில் உறவினர்கள் சிறையில் அடைத்து நெருப்பு வைத்தார்கள்.

இவர் அந்த நெருப்பில் இருந்து தப்பி ஓடிப்போய் கால் கரிந்து விடவே கரிகாலன் என்று அழைக்கப்பட்டார்.சிலர் கரிகாலன் என்ற பெயரை கறி பிளஸ் காலன் என்று பிரித்து யானைகளுக்கு காலன் என்றும் பொருள் கூறுவார்கள் கரிகாலனை கலிகாலன் என்ற கலிப்பகைக்கு காலன் என்றும் கூறுவார்கள். இவையெல்லாம் ஏற்புடையதாக இருக்கின்றது.

கரிந்த காலினை உடையவன் என்பதே பொருந்திய பொருளாகும் காய்ச்சின மேம்பிற பெரும் பெயர் கரிகால் கலிகொள் சுற்றமோடு கரிகால் காண என்று வரும் அகநானூற்று பாடல் வரிகளில் இவர் பெயர் அன் விகுதி பெறாமல் கரிகால் என்றே வழங்கப்படுவது இதனை வலியுறுத்துகிறது.கரிகால சோழன் தாய் வயிற்றில் இருக்கும் போது இவருடைய தந்தை இறந்து விட்டார்.

- Advertisement -

தாய் வயிற்றில் இருக்கும் முன்பே அரசு உரிமையை பெற்றவர் இவர்தான்.இவருக்கு பல குழந்தைகள் இருக்கின்றார்கள்.உறையூரில் மணக்கிள்ளி, வேர்ப்படகை பெருவிறற்கிள்ளி இருவரும் இவருடைய புதல்வர் என்று கூறுகின்றனர்.அது மட்டும் இல்லாமல் பட்டினம் பாளையின் பாட்டுடைத் தலைவன் இவர்தான்.

கரிகால சோழனின் சிறப்பு

கரிகால சோழன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முதல் பெரும் போர் என்னவென்று சொன்னால் வெண்ணி போர் என்று அனைவரும் கூறுவார்கள். சோழ அரியணையை கரிகாலன் நிலையாக பெறுமாறு செய்தால் தமிழகத்தின் முடிவு உடைய மூவேந்தருக்கு தலைவனாக விளங்குமாறு செய்தது இந்த போர் தான் என்று குறிப்பிடப்படுகிறது.

- Advertisement -

கல்லணை கட்டிய கரிகால சோழன் வரலாறு

கரிகால சோழன் இலங்கையில் போர் தொடுத்து வெற்றி பெற்ற பிறகு 12,000 இலங்கை வீரர்களை கைதிகளாக பிடித்து வந்து கல்லணை கட்டும் பணியில் ஈடுபட்டார்.பறந்து விரிந்து ஓடிக் கொண்டிருக்கும் காவிரி நதிக்கையின் மிகப்பெரிய கல்லணை எழுப்பினார் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் அந்த கல்லணை நம் பயன்பாட்டில் இருக்கின்றது நம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றது உலகத்தார் நம் தமிழர்களை வியந்து பார்த்து நிற்கும் கட்டடக் கலைகளில் ஒன்றாக கல்லணையும் இது பெருமைக்கும் நன்மைக்கும் எல்லாம் உரித்தாக்கியவன் மாமன்னன் கரிகால சோழன்.அந்த காலத்து பழமையான முறையில் காவிரி கல்லணை கட்டினார்கள்.

வெட்டப்படாத வலிமையான கற்களை கொண்டு கல்லணை கட்டப்பட்டது.1080 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்ட கல்லணை இந்த அளவும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றது.நான் கரிகால சோழன் காலத்தில் பிறந்தவன் என்று திமிராக நிற்கிறது.

இதுபோல சோழநாட்டின் பாசனத்திற்காகவும் விவசாயத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை கரிகாலன் சோழன் திட்டமிட்டு இருந்தார்.பல்வேறு தொலைநோக்கு பார்வையுடைய திட்டங்களை செயல்படுத்தி சோழ தேசத்தை செழிப்படைய செய்தார்.

மக்களுக்கும் ஒரு சிறப்பான ஆட்சியை தந்திருந்தார்.வீரத்திலும் தீரத்திலும் மிகச் சிறந்தவனாக திகழ்ந்தார் கரிகால சோழன்.திருமாவளவன் கரிகால் பெருவளத்தான் மாவலத்தான் என்று ஏராளமான பெயர்களை பெற்றிருந்தார் கரிகால சோழன்.தெற்கு பகுதிகளை வென்று வடக்கு பகுதிகளையும் என்று இமயத்தில் புலிக்கொடியை சூட்டினார்.

பிறகு கடல் கடந்து இலங்கையை வென்ற வீராதி வீரன் கரிகால சோழனின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு நாம் அனைவரும் பெருமடைய வேண்டும்.கரிகாலன் எங்கள் தமிழன் அவன் பிறந்த மண்ணில் நான் நாங்கள் பிறந்தோம் என்று இந்த உலகிற்கு நாம் பெருமையோடு சொல்ல வேண்டும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR