Homeதிரை விமர்சனம்அஜித் ரசிகர்களுக்கு விடாமுயற்சி படத்திலிருந்து சர்ப்ரைஸ் அப்டேட்!!

அஜித் ரசிகர்களுக்கு விடாமுயற்சி படத்திலிருந்து சர்ப்ரைஸ் அப்டேட்!!

நடிகர் அஜித் தமிழகத்தின் ஒரு தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருக்கிறார் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் மங்காத்தா என்ற திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் என்று ரசிகர் மன்றத்தை கலைத்தார்.அதன் பிறகு இவர் படம் ஓடாது என்றும் ரசிகர்கள் குறைந்து விடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது.ஆனால் இவர் ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு இவர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் அதிகமானார்கள்.

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அஜித்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள். எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவும்,தனிப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். நடிகர் அஜித் ஆனாலும் இவர் படம் வெளி வந்தால் திரையரங்கம் முழுவதும் திருவிழா காட்சி போல் தான் இருக்கும்.அந்த வகையில் இயக்குனர் Hவினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்று இந்த வருடத்தின் முதல் வெற்றி பாடமாக இருந்து வருகிறது.

- Advertisement -

அஜித் ரசிகர்களுக்கு விடாமுயற்சி படத்திலிருந்து சர்ப்ரைஸ் அப்டேட்!!

தொடர்ந்து நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62 ஆவது படத்தை நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் விக்னேஷ் சிவன் கதை திருப்தி அளிக்காததால் இயக்குனரை மாற்றி உள்ளனர். அந்த வகையில் ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை யார் இயக்குனர் என்று தெரியாமல் அஜித் ரசிகர்கள் தவித்து வந்தனர் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இயக்குனர் மற்றும் படத்தின் தலைப்பை வெளியிட்டனர்.

நடிகர் அஜித் படத்தை யார் இயக்கப் போவது என்று பெரும் குழப்பங்கள் இருந்தது அதில் நடிகர் அஜித்திற்கு வெற்றிப் படம் கொடுத்த வெங்கட் பிரபு,விஷ்ணுவர்தான் மற்றும் கே ஜி எஃப்,புஷ்பா போன்ற மாஸ் படங்களை எடுத்த இயக்குனர்களின் பெயர்களும் சொல்லப்பட்டது. ஆனால் தடம்,மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி நடிகர் அஜித்தின் 62வது படத்தை இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விடாமுயற்சி என்ற தலைப்பில் நடிகர் அஜித் 62 ஆவது படத்தை நடிக்க உள்ளார் ஆனால் தலைப்பு மட்டும் தான் இந்த படத்தில் இருந்து வெளியாகி உள்ளது வேற எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது.இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் சூட்டிங் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நேரத்தில் தற்பொழுது நடிகர் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக திரிஷா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அஜித் ரசிகர்களுக்கு விடாமுயற்சி படத்திலிருந்து சர்ப்ரைஸ் அப்டேட்!!

நடிகர் அஜித் மற்றும் திரிஷா இணைந்து நடித்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.விடாமுயற்சி படத்திற்காக நடிகை திரிஷாவின் நடிக்க வைப்பதற்கு கேட்டு உள்ளார்களாம் அதற்கு திரிசாவும் ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை.ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்திலிருந்து அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR

My Journey My Routes Map

Win7 Simu

WinZO Play Mobile Game