நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நடிகராக இருக்கிறார் இவர் இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தால் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதை தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன ஆனால் இன்னும் இது படக்குழுவினர் சார்பில் இருந்து உறுதி அளிக்கப்படாமல் இருக்கிறது இந்நிலையில் நடிகர் அஜித் விடாமுயற்சி படத்திற்காக 10 கிலோ எடை குறைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த வகையில் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் சென்ற அஜித் திரும்பும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோக்கள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.