அக்கா கனவில் வந்தால் | Akka kanavil vanthal
வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
தூங்கும் போது கனவு வருவது என்பது வழக்கமாகும் அந்த கனவில் நம் கூட பிறந்த அக்கா தம்பி அண்ணன் தங்கச்சி போன்றவர்கள் நம் கனவில் பேசுவது விளையாடுவது அவர்களுக்கு ஏதோ துன்பம் நடப்பது போல் கனவு வந்தால் அதற்கான பலன் என்னவென்று இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
சகோதரி கனவில் வந்தால் என்ன பலன்
அக்கா அல்லது உடன் பிறந்தவர்கள் கனவில் வந்தால் அவர்கள் உங்களிடம் பேசாமல் இருந்தால் அவர்கள் கூடிய விரைவில் உங்களிடம் பேசுவதற்கு அதிக வாய்ப்புள்ளதுக்கு அறிகுறியாகும்.
உடன் பிறந்த சகோதரர் கனவில் வந்தால்
உடன் பிறந்த சகோதரர் கனவில் வந்தால் அவர்களுக்கு ஏதேனும் தீமைகள் நடந்து விடும் என்று நீங்கள் பயப்படுவீர்கள் அதெல்லாம் எதுவும் நடக்காது உடன் பிறந்தவர்கள் நம் கனவில் வந்தால் நம் வாழ்வில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்து செல்வங்கள் அதிகரித்து நம் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நம் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தால் அதற்கான ஒரு தீர்வு கிடைக்கும்.
உடன் பிறந்த சகோதரி கனவில் வந்தால்
உடன் பிறந்த சகோதரிகள் கனவில் வந்தால் உங்கள் உடம்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது நீங்கி நீங்கள் ஆரோக்கியமான வாழ்வீர்கள்.உங்களுக்கு ஏதேனும் புதிய நோய் வரப்போகிறது என்றாலும் அது கூடிய விரைவில் சரியாகி நீங்கள் நலமாகி விடுவீர்கள்.
அப்பா கனவில் வந்தால் என்ன பலன் |
அக்காவிடம் சண்டை போடுவது போல் கனவில் வந்தால்
அக்காவிடம் சண்டை போடுவது போல் கனவில் வந்தால் உங்கள் உறவினர்களுடன் அல்லது நண்பர்களுடன் ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம் அதனால் நீங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பேசும்பொழுது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
அக்கா நம்மை விட்டு பிரிவது போல் கனவில் வந்தால்
அக்கா நம்மை விட்டு பிரிவது போல் கனவில் வந்தால் உங்கள் அக்காவிற்கு திருமணமாகாமல் இருந்தால் கூடிய விரைவில் ஒரு நல்ல வரன் உங்க அக்காவிற்கு கிடைக்கும். அக்காவிற்கு திருமணம் ஆகி போவது தான் உங்களுக்கு கனவில் அக்காவை பிரிவது போல் வந்துள்ளது.
அக்கா அழுவது போல் கனவில் வந்தால்
அக்கா அழுவது போல் கனவில் வந்தால் அக்காவிற்கு திருமணமாகி இருந்தால் அங்கு ஏதோ அக்காவிற்கு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம் திருமணம் ஆகாம இருக்கும் அக்காவாக இருந்தால் உங்கள் குடும்பத்தில் ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம்.
அக்கா கோவமாக இருப்பது போல் கனவில் வந்தால்
அக்கா கோவமாக இருப்பது போல் கனவில் வந்தால் அக்காவிற்கு பிடிக்காத காரியத்தை ஏதோ ஒன்று நம் வீட்டில் செய்கிறார்கள் என்று அர்த்தம் அதனால் தான் அக்கா உங்கள் கனவில் கோபமாக இருப்பது போல் வந்துள்ளார்.
இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்–கனவு பலன்கள்