அம்மா இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Amma Irappathu Pol Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!! இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போலும் இருக்கலாம் கெட்டது நடப்பது போல இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.அவ்வாறு தூங்கும் போது அம்மா இறப்பது போல் கனவு வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அம்மா இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
உயிருடன் இருக்கும் அம்மா இருப்பது போல் கனவில் வந்தால் அது நல்லது கிடையாது. ஆனால் உங்கள் மன அழுத்தம் குறையும் இருந்தாலும் அம்மா இறந்து விட்டால் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.அம்மாவை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது நல்லது இது உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
அம்மா கனவில் வந்தால் என்ன பலன் |
இறந்த அம்மா கனவில் வந்தால்
இறந்த அம்மா கனவில் வந்தால் அவர்கள் உயிரோடு இருக்கும் பொழுது ஒரு சில விஷயங்கள் அவருக்கு பிடிக்காமல் இருக்கும் இப்போது அவர்களுக்கு பிடிக்காத விஷயங்கள் நீங்கள் ஏதோ ஒன்று செய்கிறீர்கள் என்று அர்த்தம் அதை செய்ய வேண்டாம் என்று சொல்வதற்கு தான் அவர்கள் உங்கள் கனவில் வருகிறார்கள்.அது மட்டுமல்லாமல் அவர்கள் உங்கள் மீது அதிக அளவு பாசம் வைத்துள்ளதால் அடிக்கடி அவர்கள் உங்கள் கனவில் வருவார்கள்.
அம்மா அழுவது போல் கனவில் வந்தால்
அம்மா அழுவது போல் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம் அதை உணர்த்துவதற்கு தான் உங்கள் கனவில் அம்மா அழுவது போல் வருகிறார்கள். அம்மா அழுவது போல் கனவில் வந்தால் நீங்கள் செய்யும் செயலில் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம் அதனால் அதை கவனத்துடன் செய்ய வேண்டும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
அப்பா கனவில் வந்தால் என்ன பலன் |
தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன் |
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
ஆண்கள் கனவில் வந்தால் என்ன பலன் |