அம்மா கனவில் வந்தால் என்ன பலன் | Amma Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
தூங்கும் போது வரும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது கனவில் நம் உறவினர்கள் குடும்பத்தினர்கள் அம்மா அப்பா நண்பர்கள் என பலர் வருவார்கள் அதில் அம்மா நம் கனவில் வந்தால் என்ன பலன் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
அம்மா கனவில் வந்தால் என்ன பலன்
அம்மா கனவில் வந்தால் நீங்கள் செய்யும் செயலில் கவனம் இல்லாமல் செய்கிறீர்கள் என்று அர்த்தம் அதனால் நீங்கள் செய்யும் செயலில் மிகவும் கவனம் செலுத்தி செய்ய வேண்டும்.
அம்மாவிடம் பேசுவது போல் கனவில் வந்தால்
அம்மாவிடம் பேசுவது போல் கனவில் வந்தால் நீங்கள் ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டி கஷ்டப்படுகிறீர்கள். இந்த பிரச்சனைக்கான தீர்வு யாரிடம் கேட்பது என தெரியாமல் நீங்கள் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும்.
அம்மா அழுவது போல் கனவில் வந்தால்
அம்மா அழுவது போல் கனவில் வந்தால் நீங்கள் செய்யும் செயலில் ஏதோ தவறு செய்கிறீர்கள் அல்லது உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தில் நீங்கள் குழம்பி இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அம்மா இறந்து போவது போல் கனவில் வந்தால்
அம்மா இறந்து போவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை வருகிறது என்று அர்த்தம் அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இறந்த அம்மா கனவில் வந்தால் என்ன பலன்
இறந்த அம்மா கனவில் வந்தால் நீங்கள் செய்யும் ஏதோ ஒரு செயலில் தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதற்கான தீர்வு கிடைப்பதற்கான அறிகுறியாகும்.
அம்மா வீட்டில் இருப்பது போல் கனவில் வந்தால்
அம்மா வீட்டில் இருப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு பாடத்தை கற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் வாழ்க்கையில் நிறைய தவறான முடிவுகள் எடுப்பதற்கான அறிகுறி ஆகும்.
அம்மா கோபமாக இருப்பது போல் கனவில் வந்தால்
அம்மா கோபமாக இருப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு ஏமாற்றங்கள் அதிகரிக்கும். உங்களின் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத கஷ்டத்தை அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம் அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அம்மா எரிச்சலுடன் இருப்பது போல் கனவில் வந்தால்
அம்மா எரிச்சலுடன் இருப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் ஏதோ தவறு செய்யப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
அம்மா சந்தோசமாக இருப்பது போல் கனவில் வந்தால்
அம்மா சந்தோஷமாக இருப்பது போல் கனவில் வந்தால் உங்களின் பிரச்சனைகள் தீர்ந்து நீங்கள் வெற்றி பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும்.உங்கள் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையப் போகிறது என்று அர்த்தம்.
அம்மா வீட்டின் வெளியே இருப்பது போல் கனவில் வந்தால்
அம்மா வீட்டில் வெளியே இருப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் செய்யும் நினைக்கும் காரியங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் உங்கள் மனதில் ஏதோ ஒன்று செய்ய நினைத்திருக்கிறீர்கள் என்றாலும் அதை நீங்கள் செய்யலாம் அது நிச்சயம் உங்களுக்கு வெற்றியை தான் தரும். உங்களின் வாழ்க்கையில் சந்தோசம் பெருகும்.நீங்கள் ஒரு செயல் உங்களுக்காக செய்தாலும் மற்றவர்களுக்காக செய்தாலும் அந்த செயல் வெற்றியிலேயே முடியும்.
அம்மாவிடம் சண்டையிடுவது போல் கனவில் வந்தால்
அம்மாவிடம் சண்டையிடுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு ஏதோ ஒரு விபத்து நடக்கப் போவதற்கான அறிகுறியாகும் அல்லது நீங்கள் ஒரு செயல் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த செயலில் பிரச்சனைகள் ஏற்பட போக கூட வாய்ப்பு உள்ளது. அதனால் ஒரு செயல் செய்யும் பொழுது அல்லது வெளியே செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்–கனவு பலன்கள்