அம்மா கவிதை | Amma Kavithai in Tamil | அம்மா கவிதை வரிகள்
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் அம்மாவின் பாசத்தை பற்றி கவிதைகள் மூலம் தெரிந்து கொள்வோம்.இந்த உலகில் அனைத்து உயிர்களுக்கும் அதிகம் நேசிக்கும் ஒரு பந்தம் இருக்கின்றது என்றால் அது அம்மா மட்டும்தான்.இந்த உலகில் அம்மாவை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.இந்த உலகிற்கு நம்மை அறிமுகம் செய்தது அம்மா தான்.உலகில் தனக்கென்று எந்த ஒரு தேவைகளையும் எதிர்பார்க்காமல் நம் மீது அதிகம் பாசத்தை காட்டி வரும் ஒரே ஜீவன் அம்மா.
அம்மா என்ற உறவிற்கு பிறகு தான் இந்த உலகில் மற்ற உயிர்கள் எல்லாம் அம்மா என்ற உறவை பற்றி புகழ வார்த்தைகளே இருக்காது.மேலும் அம்மாவை பற்றி கவிதைகள் மூலம் பார்ப்போம்.
அம்மா கவிதைகள் – Amma Kavithai
நான் முதன்முறையாக பார்த்த
அழகிய பெண்ணின் முகம் அம்மா
அம்மா கவிதை வரிகள்
நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்,
தெரிந்தும் சுமக்கிறாய் பத்து மாதம்
வரை அல்ல.. உன் ஆயுள் காலம் வரை..
Amma Kavithai in Tamil:-
பத்து மாதம் சுமந்தாய் வயிற்றில்,
பல வருடங்கள் சுமந்தாய் வாழ்வில்,
இனி என்றுமே சுமக்க நினைக்கிறன்
என் நெஞ்சில் அம்மா.!
புதிய வாழ்க்கை கவிதைகள் | New Life Quotes In Tamil |
மனதை தொட்ட அம்மா கவிதைகள்
தூக்கத்தில் உன்னைப் பற்றி
நினைப்பவள் காதலி..
தூங்காமல் கூட உன்னையே
நினைப்பவள் தாய்.!
Amma Kavithai in Tamil:
பத்து மாதம் சுமை, ஒரு மணிநேரம் வலி,
அனைத்தும் மறந்தாள்..
குழந்தையின் முதல் அழுகை
சத்தம் கேட்டதும்.. அம்மா.!
அம்மா கவிதை 2 வரிகள்
முகத்தை காணும் முன்பே
நேசிக்க தெரிந்தவள் தாய் மட்டுமே.
துன்பங்கள் வரும் தருணம்
தாயின் மடி சொர்க்கம்.
நேசிக்கும் உறவுகள் யாவும்
நம் அம்மா ஆக முடியாது.
பாசம் அம்மா கவிதைகள்
உலகத்தை பற்றி முதன் முதலில்
நமக்கு எடுத்துக்கூறும்
நம் முதல் குரு நம் அன்னையே.
சிறு பிள்ளைத்தனமாக
தவறுகள் செய்தால் பிறரை போல்
தண்டிக்காமல்,
சரியானதை சொல்லி கண்டித்து,
அழுது நடித்தால் கூட அதை
மன்னிப்பவள் நீதானே அம்மா.
மேலும் படிக்க..