அம்மை நோய் வகைகள் படங்கள் | Ammai Noi Symptoms In Tamil
அம்மை நோய் என்பது வெயில் காலத்தில் கடும் வெப்பத்தினால் ஏற்படும் கொப்புள நோயாகும்.இந்த நோய் பெண் தெய்வமான காளியம்மாள் உண்டானது என்று நம்பி காரணத்தினால் அதற்கு அம்மை நோய் என்று தமிழர்கள் பெயரிட்டு இருந்தனர்.பிற்காலத்தில் கொற்றவை என்னும் போர் வெற்றி தெய்வத்தையும் அம்மை நோய் வராமல் தடுப்பதற்கு வணங்கி வந்தார்கள்.
அம்மை நோய் அறிகுறிகள்
அம்மை நோயின் அறிகுறி முதலில் காய்ச்சல் வரும் அதனை தொடர்ந்து பசியின்மை,உடல் பலவீனம் ஏற்படக்கூடும்.சின்னமையாக இருந்தால் உடலில் நீர் கட்டியாக சிறிய கொப்புளங்கள் ஏற்படும் பிறகு அதை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்து இருக்கும்.நிறம் மாறி கொப்புளங்கள் இருந்து நீர் வடியும் பிறகு நீர் வறண்டு கொப்புளங்கள் உடைந்து விடும்.கொப்புளம் உள்ள இடத்தில் வடு ஏற்படக்கூடும்.உடலில் அரிப்பு தாங்க முடியாத வழி தொடர்ந்து மிதமான காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இந்த கொப்புலுங்க ஏழு முதல் பத்து நாட்களுக்குள் உடைந்து விடும்.
அம்மை நோய் வகைகள் படங்கள்
அம்மை நோய் ஏராளமாக இருக்கின்றது.
- பனை முகரி
- பாலம்மை
- மிளகம்மை
- வரகுதரியம்மை
- கல்லுதரியம்மை
- உப்புதரியம்மை
- கடுகம்மை
- கடும் பனிச்சையம்மை
- வெந்தயவம்மை
- பாசிப்பயறம்மை
- கொள்ளம்மை
- விச்சிரிப்பு அம்மை
- நீர்கொள்ளுவன் அம்மை
- தவளையம்மை
இவை அனைத்திலும் அம்மை நோயில் வருகின்றது.இந்த நோய் பெரும்பாலும் கோடை காலத்தில் அதுவும் குழந்தைகளுக்கு வரும் நோயாகும்.
பனை முகரி
பனை முகரி அம்மை சிறு சிவந்த புள்ளி போல் தோன்றும் இதனால் உடம்பில் அரிப்பை ஏற்படுத்தினால் அதுவே பணி முகரி அம்மை நோயாகும்.
பாலம்மை
பாலம்மை என்பது சிறு சிவந்த நிற கொப்புளங்கள் போன்று ஏற்படுவது.இதனால் உடலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது சிறிது நாட்கள் காய்ச்சல் ஏற்படும்.
கடுகம்மை
கடுகம்மை என்பது சிவந்த நிறத்தில் கொப்பளங்கள் கடுகு போன்று சிறிது சிறிதாக உடல் முழுவதும் தோன்றக்கூடியதாகும்.
விச்சிரிப்பு அம்மை
விச்சிரிப்பு அம்மை என்பது உடல் முழுவதும் படர்ந்து சிவப்பு நிறத்தில் தோன்றக்கூடியது.
அம்மை நோய் குணமாக
அம்மை நோயை குணப்படுத்துவதற்கு வேப்ப இலை ஒரு 20 எடுத்து அதனுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கவும் நன்றாக ஆற வைத்து காப்பீட்டம்ளரில் அரை டம்ளர் சாறு அம்மை உள்ளவர்களுக்கு கொடுத்து வந்தால் ஒரு நாளைக்கு காலை மாலை இருவேளைகள் குடித்து வந்தால் அம்மை நோய் விரைவில் குணமாகும்.