சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை தழுவியது இந்நிலையில் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து தமன்னா,ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார்,மோகன்லால்,சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என பட குழுவினர் அறிவித்திருந்தனர்.இந்நிலையில் ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடிய காவாலா என்ற பாடல் ஜூலை 6 தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது இந்த பாடல் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட் ஆக ஜெயிலர் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வரும் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வந்து கொண்டே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் இறுதிக்குள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.