ரஜினிகாந்த் பெரும்பாலும் இவர் தமிழ்த் திரைப்படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார் ஆனால் இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள். சூப்பர் ஸ்டார் மற்றும் தலைவர் என்று ரஜினிகாந்தின் ரசிகர்களால் அழைக்கப்படுகிறது.
ரஜினிகாந்த் ஏராளமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருகிறார் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்தது. எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் வெற்றி பெறவில்லை மக்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தது.
இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் நெல்சன் நடிகர் விஜயை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கியிருந்தார் இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்று இருந்தது.இருவருமே தோல்வி படங்களை கொடுத்ததால் ஒரு வெற்றி இருவருக்குமே கிடைக்க வேண்டும் என்பதற்காக நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணி அமைத்தனர் அந்த கூட்டணியில் ஜெயிலர் என்ற திரைப்படத்தை தற்போது எடுத்து முடித்து உள்ளனர்.
ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் மோகன்லால் தமன்னா யோகி பாபு ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இருந்தது தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் வெளியிடப் போவதாகவும் டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் அனிருத் இசையில் இன்று 6 மணி அளவில் ஒரு பாடல் ஒன்று வெளியாக இருக்கிறது இதற்கான ப்ரோமோ ஜூலை 3 தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது.
இப்படி ரஜினியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி கிடைத்து வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 29ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்பட இருக்கிறதாக தகவல் வெளியாகி உள்ளது.விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.