Apj Abdul Kalam In Tamil | அப்துல் கலாம் வரலாறு
இந்தியாவின் மிக முக்கியமான விஞ்ஞானி ஏ பி ஜே அப்துல் கலாம் ஆவார் இவர் 11 வது குடியரசு தலைவர் அது மட்டும் இன்றி இவருக்கு பல பட்டங்கள் உள்ளன இந்தியா ஏவுகணை நாயகன் என்றும் கூறுவார்கள் கல்லூரி பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பேசுவார் மேலும் இவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி விரிவாக பார்ப்போம்.
அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு
பிறப்பு
1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி இன்று தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பாம்பன் தீவில் அமைந்துள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார்.இவருடைய தந்தை பெயர் ஜைனுலாப்தீன் தாய் பெயர் ஆஷியம்மா.இவர்கள் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
பள்ளிப்படிப்பு
அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பள்ளி படிப்பை தொடங்கினார் ஆனால் அவருடைய குடும்ப ஏழ்மையில் இருந்ததால் அவர் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் செய்தித்தாள் விநியோகம் செய்து படித்து வந்தார்.
கல்லூரி படிப்பு
அப்துல் கலாம் பள்ளி படிப்பை முடித்த பிறகு திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் படித்தார்.பிறகு 1954 ஆம் ஆண்டு இயற்பியல் இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு இயற்பியல் மீது ஆர்வம் இல்லை என்பதனால் அவர் சென்னையில் உள்ள எம் ஐ டி யில் விண்வெளி பொறியியல் படிப்பை படித்து அதே கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானி அப்துல் கலாம்
இவர் 1960 ஆண்டில் டி ஆர் டி ஓ விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கினார்.பிறகு ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்தார்.
அதன் பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் ஐஎஸ்ஆர்ஓ ஆராய்ச்சி பணிகளை தொடங்கி பிறகு துணைக்கோள் ஏவுகணை பிரிவில் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்கு வகித்தார்.
பிறகு 1980 ஆம் ஆண்டு எஸ்எல்வி 3 ராக்கெட் பயன்படுத்தி ரோகினி 1 என்ற செயற்கை கொலை விண்வெளியில் செலுத்தி சாதனை படைத்தார்.இது இவருக்கு மட்டும் இல்லாமல் இந்தியாவிற்கு மிகப்பெரிய சாதனையாக இருந்தது.
அப்துல்கலாம் பத்ம பூஷன் விருது
இவருடைய வியக்கத்தக்க செயலை பாராட்டி 1981 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.1999 ஆம் ஆண்டில் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றி இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றினார்.
அப்துல் கலாம் அவர்கள் இதுவரை ஐந்தியோவுகளை திட்டங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.இதனால் இவர் அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகின்றார்.
குடியரசு தலைவர் ஆன அப்துல்கலாம்
2002 ஆம் ஆண்டில் நடந்த கொடியேசுத் தேர்தலில் வெற்றி பெற்று ஜூலை 25ஆம் தேதி இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.இவர் குடியரசுத் தலைவர் ஆகுவதற்கு முன்பே மத்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.அதுமட்டுமில்லாமல் பாரத ரத்னா விருது வழங்கிய மூன்றாவது குடியரசுத் தலைவராகவும் விளங்கினார்.
மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம்
2007 ஆம் ஆண்டு வரை மக்களின் குடியரசு தலைவராக இருந்தார்.மேலும் இவர் அனைவராலும் மக்களின் ஜனாதிபதி இன்று அன்போடு அழைக்கப்பட்டார்.பிறகு 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடியரசு தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்தார்.பிறகு இவர் பல்வேறு காரணங்களினால் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்தார்.
அப்துல்கலாம் பெற்ற விருதுகள்
● 1981-பத்மபூஷன்
● 1990-பத்ம விபூஷன்
● 1997-பாரத ரத்னா
● 1997-தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது
● 1998-வீர் சவர்கார் விருது
● 2000-ராமானுஜன் விருது
● 2007-அறிவியல் கௌரவ டாக்டர் பட்டம்
● 2007-கிங் சார்லஸ் -2 பட்டம்
● 2008-பொறியியல் டாக்டர் பட்டம்
● 2009-சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
● 2009-ஹூவர் மெடல்
● 2010-பொறியியல் டாக்டர் பட்டம்
● 2012-சட்டங்களின் டாக்டர்
● 2012-சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
அப்துல்கலாம் எழுதிய நூல்கள்
● அக்னி சிறகுகள்
● இந்தியா 2020
● எழுச்சி தீபங்கள்
● அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
அப்துல்கலாம் அவர்கள் இறுதி வரை பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர்.இவர் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்று கூறி கனவு காணுங்கள் அந்த கனவு நினைவாகும் அதை பாடுபடுங்கள் என்று பதிவை இளைஞர்களின் மனதில் ஆழமாக பதிவு செய்தார்.அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய பொன்மொழிகளாலும் கவிதைகளாலும் மக்களை மனதில் நீங்காது இடம் பிடித்துவிட்டார்.
அப்துல்கலாமின் கடைசி நொடி
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஷில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் மேடையில் பேசிக் கொண்டிருந்த பொழுது மயங்கி கீழே விழுந்து இறந்து விட்டார்.
அப்துல் கலாம் பற்றி 10 வரிகள்
● அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படும் என்றும்,ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை நாளான ஆகஸ்டு 15 ஆம் தேதியன்று அறிவியல் வளர்ச்சி,மாணவர் நலன் மற்றும் மனிதவியலில் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
● அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி வாசிப்பு
நாளாக கொண்டாடப்படும் என்று மகாராஷ்ட்ர அரசு அறிவித்தது.
● உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.