Homeமருத்துவம்ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள் | Apple cider vinegar

ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள் | Apple cider vinegar

ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள் | Apple cider vinegar

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் ஆப்பிள் சீடர் வினிகர் என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.இது ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.இந்த வினிகரில் ஏராளமான மருத்துவ பயன்கள் நிறைந்திருக்கிறது.குறிப்பாக இந்த வினிகர் காய்ச்சல் அலர்ஜி மற்றும் நோய் தொற்றுக்களை குணப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

- Advertisement -

தொப்பை மற்றும் உடல் எடை குறைக்க திட்டமிட்டு இருப்பவர்கள் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதனை விரிவாக பார்ப்போம்.

ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆப்பிள் சீடர் வினிகர் சிறந்த தீர்வாக அமைகிறது.சிலர் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.ஒரு சிலர் இரவு நேரத்தில் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

நீங்கள் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சீடர் வினிகரை சிறிதளவு சேர்த்து அதை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடையை விரைவில் குறைக்க உதவியாக இருக்கும்.உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைக்கவும் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.ஆப்பிள் சீடர் வினிகர் தினமும் காலை நேரத்தில் சாப்பிடுவதினால் நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் விரைவில் நீங்குகிறது.

- Advertisement -

இதனுடைய காரணமாக நமது உடல் புத்துணர்வு பெறுகின்றது.காலை நேரத்தில் ஆப்பிள் சீடர் வினிகரை குடிப்பதனால் நமது உடலின் பீஹெச் அளவு கண்காணிக்கப்படுகின்றது.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் ஸ்டாமினாவை அதிகரிக்கிறது.ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடித்து வந்தால் உடல் எடை குறைப்பு இது சரியான விகிதத்தில் உதவுவதில்லை என்று கூறுவார்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள்
ஆப்பிள் சீடர் வினிகர் உடல் எடை குறைய

ஆப்பிள் சீடர் வினிகர் இருக்கும் கலோரி மிக குறைந்த அளவில் இருப்பதனால்.இது சிறந்த டிடாக்சிபையிங் டிரிங் ஆக செயல்பட்டு நமது உடலில் இருக்கும் நச்சுக்களை போக்குவதற்கு உதவியாக இருக்கிறது.தினமும் சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகரை குடித்து வருவதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைக்க உதவியாக இருக்கின்றது.

- Advertisement -

உடலின் இடுப்பு பகுதியில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை அகற்றவும் பயன்படுகிறது.ஆப்பிள் சீடர் வினிகரில் இருக்கும் அதிகளவிலான ஆண்டி ஆக்சிடெண்ட் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க பயன்படுகிறது.ஆப்பிள் சீடர் வினிகர் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.ஆப்பிள் வினிகரை தொடர்ந்து பயன்படுத்தினால் நம் உணவு உண்பதை குறைத்து அதிகளவிலான கலோரி உண்டாவதை தடுக்க உதவுகிறது.இது உடல் எடையை குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

வேப்பிலை பயன்கள் | Veppilai Benefits in Tamil
ஆப்பிள் சீடர் வினிகர் தீமைகள்

ஆப்பிள் சீடர் வினிகர் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மையை தருகிறது.இதனை அதிகப்படியாக சாப்பிட்டால் உடலுக்கு தீங்கினை விளைவிக்கிறது.ஆப்பிள் சீடர் வினிகரில் இருக்கும் அமிலத்தன்மையின் காரணமாக இதனை அதிகமாக பயன்படுத்தினால் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும்.ஆப்பிள் சீடர் வினிகரை சருமத்தில் நேரடியாக பயன்படுத்தக் கூடாது ஏனென்றால் இது தோல் அலர்ஜியை ஏற்படுத்தும்.எலும்பு பிரச்சினைகள் இருப்பவர்கள் ஆப்பிள் வினிகரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள்
ஆப்பிள் சீடர் வினிகர் நன்மைகள்

ஆப்பிள் சீடர் வினிகர் ரத்தத்தில் இருக்கும் உயர் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது.மேலும் செரிமான பிரச்சனைகளையும் போக்குகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.மேலும் சிறந்த சருமம் மற்றும் முடி பராமரிப்பிற்கு பயன்படுகிறது.

ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தும் முறை

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு ஆப்பிள் சீடர் வினிகரை நாம் குடிக்க வேண்டும்.இதனை நாம் நேரடியாக எடுத்துக் கொள்ளக் கூடாது.ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் சேர்த்து குடிக்க வேண்டும்.இதனை குடித்த பிறகு உடன் வாயை நன்கு கழுவ வேண்டும்.ஏனென்றால் ஆப்பிள் சீடர் வினிகர் என்பது பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளால் நொதிக்கப்படும் திரவமாகும்.

இந்த நொதிக்கப்படும் திரவத்தை நீண்ட நேரம் வைத்திருந்தாலோ அல்லது இருக்கும் பட்சத்திலோ அது பற்கள் சேதம் அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.உடல் எடையை குறைக்க மட்டும் இல்லாமல் பல்வேறு பலன்களையும் ஆப்பிள் சீடர் வினிகர் அளிக்கின்றது.

இதையும் படிக்கலாமே..

கேரட் பயன்கள் மற்றும் தீமைகள் | Carrot Benefits in Tamil
அவகோடா பழம் பயன்கள் | Avocado in Tamil
செவ்வாழை பயன்கள் | Sevvalai Benefits in Tamil
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR