தமிழகத்தில் அதிக அளவு படங்கள் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகிறது. திரையரங்குகளில் வெளியிடப்படும் படங்களை ஒரு சில மாதங்களில் டிவியிலும் போட்டு விடுகிறார்கள் என்னதான் டிவியில் போட்டாலும் திரையரங்குகளில் படம் பார்க்கும் அனுபவம் இருக்காது.
ஒவ்வொரு படமும் திரையரங்குகளில் வெளியிடும் பொழுது திருவிழா போல் காட்சி அளிக்கும் அதுவும் குறிப்பாக சொல்லப் போனால் அஜித்,விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியே வந்தால் ஒரு வாரம் முழுவதும் திரையரங்குகள் ஹவுஸ் புல் ஆக இருக்கும் அந்த அளவுக்கு இவர்களின் படம் வெற்றிகரமாக ஓடும்.இவர்களைப் போல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் டிக்கெட் கிடைப்பது கடினமாக இருக்கும்.
பொதுவாக டிக்கெட்டின் விலை திரையரங்குகளை பொறுத்து அமைக்கப்படும். மல்டிபிளக்ஸ் முதல் சிறிய திரையரங்குகள் வரை தமிழக முழுவதும் இயங்கி வருகிறது அதனால் திரையரங்குகளை பொறுத்து டிக்கெட் வேலையை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் பல்வேறு வகையான திரையரங்குகள் இயக்கப்பட்டு வருகிறது. திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதாவது மல்டிபிளக்ஸ் போன்ற திரையரங்குகளுக்கு 250 ரூபாயும்,A/C அமைக்கப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு 200 ரூபாயும்,சாதாரண திரையரங்குகளுக்கு 120 ரூபாயும் உயர்த்திக் கொள்வதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.