பெரும்பாலும் அனைவரும் வெளியில் செல்லும் பொழுது அல்லது நிகழ்ச்சிக்கு செல்லும் சர்மம் அழகாக இருப்பதற்காக பல ரசாயன பொருட்களையும் நம் உடலில் இருந்து வாசனை வருவதற்காக வாசனை திரவியத்தை பயன்படுத்துவோம். நல்ல வாசனை வரும் பொருளாக இருந்தாலும் சரி கெட்ட வாசனை பொருளாக இருந்தாலும் சரி அதிக அளவு வந்தால் அந்தப் பகுதியை விட்டு நாம் விலக வேண்டும் என்று நம் மனம் சொல்லும்.
ஆனால் ஒரு சிலருக்கு குறைவான வாசனை தரக்கூடிய பொருள் பயன்படுத்தினாலும் அல்லது பயன்படுத்தியவர் யாராவது கிட்ட இருந்தாலும் அவருக்கு மயக்கம் வருவது போல் உணர்வுகள் ஏற்படும்.இப்படிப்பட்ட உணர்வு வந்தால் அவர் உடல் நிலையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம் அது என்ன பிரச்சனை என்பதை நம் முழு விவரமாக பார்ப்போம்.
குறைந்த அளவு வாசனை தரும் பொருட்கள் பயன்படுத்தும் பொழுது அல்லது வாசனை வந்து மயக்கம் வருவது போல் உணர்ந்தால் அவருக்கு மூக்கிலோ நரம்பிலோ ஏதோ ஒரு பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம் அதனால் கூடிய விரைவில் நீங்கள் மருத்துவர அணுகி பரிசோதனை செய்வது நல்லது. உங்கள் உடலில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்று உங்கள் உடலை பரிசோதித்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏதும் இருந்தால் உடனடியாக அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.