Homeமருத்துவம்நறுமணத்திற்காக பயன்படுத்தும் ஊதுபத்தி,சாம்பிராணியில் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா?

நறுமணத்திற்காக பயன்படுத்தும் ஊதுபத்தி,சாம்பிராணியில் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா?

வணக்கம் நண்பர்களே.!!பொதுவாக நம் முன்னோர்கள் வீட்டில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தாமல் இயற்கையில் செய்யப்பட்ட பொருட்களை தான் பயன்படுத்தி வந்தார்கள் அந்த வகையில் வீடு வாசனையாக இருப்பதற்காக ஜவ்வாது போன்ற பொருட்களை பயன்படுத்தினார்கள்.

கொசு வீட்டிற்குள் வராமல் இருப்பதற்கு வெப்பந்தலை நொச்சி குப்பைமேனி போன்ற இலைகளை பயன்படுத்தி கொசுவை விரட்டி வந்தார்கள் ஆனால் இப்பொழுது இருக்கும் காலத்தில் எதுக்கெடுத்தாலும் ரசாயனம் கலந்த பொருட்களை நாம் பயன்படுத்தி வருகிறோம்.அதனால் நம் உடம்புக்கு பல பாதிப்புகள் இருக்கிறது. ரசாயனம் கலந்த பொருட்களை அதிகளவு பயன்படுத்தாமல் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது அந்த வகையில் நம் வீடு வாசனையாக இருப்பதற்கு ஊதுவர்த்தி சாம்பிராணி போன்ற ரசாயன கலந்த பொருட்களை நம் பயன்படுத்தி வருகிறோம்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் கழிப்பறை சுத்தம் செய்வதற்கு வீடை சுத்தம் செய்வதற்கு கொசுக்கள் வீட்டுக்குள் வராமல் இருப்பதற்கு ரசாயன கலந்த கொசு விரட்டியை பயன்படுத்தி வருகிறோம் இது நம் உடலுக்கு பாதிப்பை கொடுக்கிறது.பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தில் எந்த குறை இல்லாதவர்கள் இது போன்ற ரசாயனங்களை பயன்படுத்தும் பொழுது சிறு தும்மலுடன் விலகி சென்று விடுகிறார்கள்.

ஆனால் ஏற்கனவே ஆஸ்துமா,மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் ரசாயனத்தினால் செய்யப்பட்ட பொருட்களின் வாசனையை சுவாசிப்பதால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அதிக அளவு பாதிப்பு ஏற்படுகிறது.

இது போன்ற ரசாயன பொருட்களை நம் வீட்டில் பயன்படுத்தினால் நமக்கு பெரும் ஆபத்து ஏற்படுமா என்றால் கிடையாது இதைவிட அதிகமாக நாம் வெளியில் செல்லும்பொழுது தொழிற்சாலையில் இருந்து வரும் புகை வாகனத்தில் இருந்து வரும் புகையை விட இது போன்ற ரசாயன பொருட்களில் இருந்து வரும் புகையின் நஞ்சு குறைவாக தான் இருக்கிறது.

நறுமணத்திற்காக பயன்படுத்தும் ஊதுபத்தி,சாம்பிராணியில் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா?

- Advertisement -

இருந்தாலும் தினமும் வாசனைக்காக ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படும். அதனால் தினந்தோறும் பயன்படுத்தாமல் ரசாயனம் கலந்த பொருட்களை குறைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.இப்பொழுது இருக்கும் உலகத்தில் இயற்கையாக செய்யப்பட்ட பொருட்கள் மறைந்து செயற்கையாக செய்யப்பட்ட பொருட்கள் தான் அதிகமாக இருக்கிறது.

அதனால் செயற்கையாக செய்யப்பட்ட ஊதுபத்தி,சாம்பிராணி போன்ற பொருட்களை பயன்படுத்தலாம் ஆனால் தினந்தோறும் இதை பயன்படுத்தாமல் குறைத்துக் கொள்ள வேண்டும்.சாம்பிராணி,ஊதுபத்தி போன்ற ரசாயன பொருட்களை நாம் பயன்படுத்தி தான் ஆக வேண்டும்.

- Advertisement -

ஏனென்றால் இந்த பொருட்களை நம் கோவிலில் சாமி கும்பிடும் பொழுது வீட்டில் சாமி கும்பிடும் பொழுது சாம்பிராணி,ஊதுபத்தி போன்ற பொருட்களை நாம் பயன்படுத்துவோம் அதனால் அப்பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம் அதிகமாக பயன்படுத்தி அதை அதிகமாக சுவாசித்தால் தான் உடல் ஆரோக்கியத்திற்கு குறைபாடுகள் ஏற்படும்.

அதனால் அதை பயன்படுத்தலாம் அதன் அளவுகளை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும்.ரசாயனத்தினால் செய்யப்பட்ட ஊதுபத்தி.சாம்பிராணி போன்ற பொருட்களை நம் வீட்டில் பயன்படுத்தும் போது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்துக் கொள்வது நல்லது ஏனென்றால் நம் வீட்டின் ஜன்னல்,கதவு போன்ற பகுதியை திறந்து வைத்தால் ஊதுபத்தி மற்றும் சாம்பிராணியில் இருந்து வரும் நறுமணம் மட்டும் வீட்டிற்குள் இருக்கும் அதிலிருந்து வரும் புகை கதவு மற்றும் ஜன்னலை திறந்து வைத்திருப்பதால் அதன் வழியாக வெளியே சென்று விடும் அதனால் அதிக அளவு பாதிக்கப்படாது.

ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து விட்டு இது போன்ற பொருட்களை தினமும் பயன்படுத்தலாம் என்றால் அதுதான் கூடாது என்ன தான் நஞ்சு வெளியே சென்றாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு குறைபாடு ஏற்படுத்தும் பொருளாக இருப்பதால் அதனை அளவாக பயன்படுத்துவது நல்லது.

 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR