வணக்கம் நண்பர்களே.!! நம் வீட்டில் உணவு செய்ய நேரம் ஆகும் பொழுது விரைவாக உணவை செய்து முடிப்பதற்கு நாம் ஞாபகத்துக்கு வருவது ரவா தான்.ரவா தான் குறைந்த நேரத்தில் எளிய முறையில் சமைக்க முடியும் ஆனால் உப்புமா என்றால் சில பேருக்கு பிடிக்காது காரணம் சில பேரு வீட்டில் காலை உணவு இதுவாகவே தான் இருக்கிறது.
ஆனால் உணவில் நாம் சமைத்து சாப்பிடும் இட்லி தோசை போன்ற உணவுகளை விட ரவா தான் சிறந்தது. பொதுவாக அதிக நன்மைகள் இருக்கும் உணவுகளை நாம் சாப்பிடுவதற்கு பிடிக்காது அந்த வகையில் உப்புமாவை செய்யும் இந்த ரவையில் பல நன்மைகள் இருக்கிறது.
ரவையில் இருக்கும் நன்மைகள்
ரவை உப்புமா செய்யும் உணவு பொருட்கள் மட்டும் இல்லாமல் பல நோய்களுக்கு மருத்துவ பொருளாகவும் இருக்கிறது.இதயத்தில் ஏற்படும் பல நோய்களுக்கு ரவை மருந்தாக இருக்கிறது.
ரவையில் இதயத்தை பாதுகாக்கும் வேதிப்பொருளான செலினியம் இருக்கிறது.அந்த வகையில் மாரடைப்பு, இதய செயலிழப்பதை தடுக்கிறது நோய் தொற்றிலிருந்து பாதிக்காமல் பாதுகாக்கவும் செய்கிறது.
ரவை இதய நோய்க்கு மட்டுமில்லாமல் இரத்த சோகை நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது ரவையில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக ஆக்குகிறது. அதனால் ரத்தத்தில் ஓட்டத்திற்கு எந்தவித பாதிப்பு ஏற்படுத்தாமல் இது பாதுகாக்கிறது.
ரவையில் செய்யப்படும் உணவுகள் எளிதில் ஜீரணம் அடையக்கூடிய சக்தியை கொண்டு இருப்பதால் செரிமான பிரச்சனைகள் எதுவும் வராது.பொதுவாக வெயில் காலம் என்றாலே நீரிழப்பு என்ற நோய் ஒரு சிலருக்கு வரும் அதனால் நம் உடல் ஆற்றலை இழந்து விடுவோம்.
நீரழிவு நோய் வராமல் இருப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுகளில் ரவையை செய்யப்பட்ட உணவை சேர்த்துக் கொண்டால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலும் அதிக நீரேற்றத்திற்கு ரவையினால் செய்யப்பட்ட உணவு உதவுகிறது.
ரவையில் செலினியம், வைட்டமின் பி,வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் உடலில் எந்த விதமான நோய்கள் வராமலும் தடுக்கிறது அதாவது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதை எதிர்த்து எந்த ஒரு நோய்களும் வராமல் இது தடுத்து வருகிறது.
ஒரு சிலர் கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டு தேவையில்லாத கொழுப்புகள் உடலில் தங்கி உடல் எடை அதிகரித்து இருக்கும். அதனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பல உடற்பயிற்சிகளையும் பல உணவுகளையும் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள்.எடையை குறைப்பதற்காக பலவிதமான உணவுகளை சாப்பிட்டு வந்திருப்போம் ஒரு சில உணவுகளை சாப்பிடாமலும் இருந்து வந்திருப்போம்.
உடல் எடையை குறைப்பதற்காக உணவுகளின் அளவுகளை குறைத்து வருவோம்.ஒரு சில சிற்றுண்டிகளில் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில்லை. ரவையினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைப்பதற்கும் இது உதவுகிறது.