இப்போது இருக்கும் உணவு முறைகளால் உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகள் என் மேலே வந்து விடுகிறது அந்த வகையில் சில பேருக்கு 25 முதல் 30 வயதுக்குள் நரைமுடி வந்து விடுகிறது இன்னும் சொல்லப்போனால் 20 வயது இருக்கும் பொழுது ஒரு சிலருக்கு நரை முடி வந்து விடுகிறது. நரைமுடி இருப்பதால் ஒரு சிலர் வெளியே செல்ல கூட தயக்கம் காட்டி வருகிறார்கள்.
அதனால் நரை முடி கருப்பாக அதற்கு பல ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள் ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவது மூலம் நரைமுடி கருப்பாகும் ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு தலைவலி முடிக்கு பாதிப்பு முடி கொட்டுதல் போன்ற செயல்பாடுகள் ஏற்பட்டு விடும் அதனால் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நம்முடைய கற்பதற்கு ஒரு சிறந்த வழி இருக்கிறது.
நரை முடி கருப்பாவதற்கு வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் பெருஞ்சீரகம் போதும்.தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பெருஞ்சீரகத்தை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அந்த எண்ணில் ஆற வைத்து அதை எடுத்து வைத்துகொள்ளவும்.
பெருஞ்சீரகத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது அது மட்டும் இல்லாமல் நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயிலும் அதிக அளவு ஊட்டச்சத்து இருக்கிறது. பொதுவாக தேங்காய் எண்ணெயை நாம் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறோம்.
நம் தயாரித்து வைத்துள்ள பெருஞ்சீரக எண்ணையை தலையில் தடவி வருவதன் மூலம் முடி உதிர்வதை குறைப்பது, நரைமுடி கருப்பாவதற்கும்,முடி வளர்ச்சி பெறுவதற்கும் உதவுகிறது.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.