அதிமதுரம் பயன்கள் மற்றும் தீமைகள்
அதிமதுரம் பயன்கள்
அதிமதுரம் மருத்துவ குணம் நிறைந்துள்ள செடியாகும் இது ஆயுர்வேத சிகிச்சையில் முக்கிய பயன்படுத்தப்படுகிறது ஒவ்வொரு செடியில் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது இந்த அதிமதுரம் வேரில் மட்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
முந்தைய காலகட்டத்தில் சுகப்பிரசவம் என்பது மறு ஜென்மம் என்று சொல்வார்கள் அந்தக் காலகட்டத்தில் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள் அதிமதுரம் தேவதாரம் இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து சூடான நீரில் கலந்து பிரசவ வலி ஏற்பட்டதற்கு பின் இந்த நீரை இரண்டு முறை குடித்து வந்தால் சுகப்பிரசவம் ஆகும் என்று சொல்வார்கள்.
அதிமதுரம் சாப்பிடும் முறை
அதிமதுர வேரை பொடியாக்கி அதை நீரில் போட்டு நன்றாக கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து அதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி பிரச்சனை வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சிறுநீரகங்கள் தொண்டை தலைமுடி மலட்டுத்தன்மை வழுக்கை மலச்சிக்கல் கல்லீரல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.
அதிமதுரம் அழகு குறிப்புகள்
சருமத்தின் அழகிய நிறத்தை இயற்கையாகவே பெறுவதற்கு அதிமதுரத்தூள் பயன்படுகிறது இது முகம் இழந்த பொழிவை மீட்டு நிறத்தே அழகாக்க செய்யும் முகத்தை பளிச்சென்று வைக்க செய்யும் அதிமதுரத்தூள் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் ஒரு ஸ்பூன் தயிர் ஒரு ஸ்பூன் மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கி பேஸ்ட் போல் குலைத்து முகத்தில் தடவி விடவும் பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும்.
இந்த பேஸ்ட் பேக் வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறையாவது இந்த பேஸ்ட் பேக் பயன்படுத்தலாம் வறண்ட சருமம் இருப்பவர்கள் இந்த பேஸ்ட் பேக் பயன்படுத்தும் போது அதிமதுர பொடிஉள்ள ஈரப்பதம் தன்னை முகத்தில் தக்க வைத்துக் கொள்கிறது சருமத்தில் விழும் சுருக்கங்கள் கரும்புள்ளிகள் போன்றவை இந்த பேஸ்ட் பேக் தடுக்கிறது
அதிமதுரத்தின் தீமைகள்
அதிமதுரம் ஒரு மருத்துவ குணம் மிக்க மூலிகை மருந்தாகும் அதிமதுரத்தில் மருத்துவ குணங்கள் நன்மைகள் உண்டாகும் என்பது அனைவருக்கும் தெரியும் அதிமதுரத்திலும் தீமைகள் உள்ளது அதிமதுரம் அதிக நறுமண காரணிகளை கொண்டுள்ளது.
அதிமதுரம் சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பானது இதனால் அதிமதுரம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உடம்பில் உள்ள பொட்டாசியத்தின் அளவை குறைக்கிறது மாதவிடாய் வராமல் போகலாம் உடம்பில் எந்த பகுதியிலும் வேண்டுமானாலும் வீக்கம் ஏற்படலாம் தசை சுருக்கம் உண்டாகும்மற்றும் கர்ப்பிணி பெண்கள் அதிகம் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லதல்ல ஏனென்றால் குழந்தையின் மூளை வளர்ச்சி குறையும் என்று ஆராய்ச்சியில் கூறுகின்றனர்