Homeமருத்துவம்அத்திப்பழம் பயன்கள் | Athipalam Benefits Tamil

அத்திப்பழம் பயன்கள் | Athipalam Benefits Tamil

அத்திப்பழம் பயன்கள் | Athipalam Benefits Tamil

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் அத்திப்பழத்தில் இருக்கும் பல்வேறு நன்மைகளைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.அத்திப்பழமானது தாவரக் குடும்பத்தை சேர்ந்தது.அத்தி பழத்தின் மரம் களிமண் மற்றும் ஆற்றின் கரையில் வளரக்கூடியது.அத்திப்பழம் பூவும் விதையும் சேர்ந்து பழமான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.அத்தி பழமானது பலத்தை விட நன்றாக உலர்ந்த அத்தி பழத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கிறது.அத்திப்பழத்தை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.மேலும் அத்திப்பழத்தினை சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் அத்திப்பழத்தில் இருக்கும் பயன்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

அத்திப்பழம் மரம்

அத்தி மரங்களில் பல வகைகள் இருக்கின்றது.அத்தி மரத்தின் பட்டை சாம்பல் நிறத்திலும் மற்றும் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.அத்தி மரத்தின் இலைகளில் மூன்று நரம்புகள் காணப்படும்.அத்தி மரத்தின் காய்கள் சற்று நீளமாக முட்டை வடிவில் தண்டிலும் கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்து கொத்தாக காய்க்கும்.இது பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறமாக காணப்படும்.

அத்திக்காய் பழுத்த பிறகு கொய்யாப்பழத்தை போல் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.அத்தி மரத்தின் பழங்கள் பழுத்த பிறகு தானே கீழே விழுந்து விடும்.அத்திப்பழம் நல்ல மனமாகவும் அதனை அறுத்தால் மெல்லிய பூச்சிகள் புழுக்கள் அதில் காணப்படும்.இந்த அத்திப்பழத்தை பதப்படுத்தி மட்டுமே உண்ண முடியும்.

அத்திப்பழம் பயன்கள்
அத்திப்பழம் பயன்கள்

இரத்தம் அதிகரிக்க

- Advertisement -

அத்திப்பழத்தில் அதிகம் சத்துக்கள் இருப்பதனால் உடலில் இருக்கும் ரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது.அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் இருக்கும் ரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவியாக இருக்கிறது.மேலும் உடல் வளர்ச்சி அடைந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ரத்த சர்க்கரை பிரச்சனை

- Advertisement -

அத்திப்பழத்தில் அதிகம் நார் சத்துக்கள் இருப்பதினால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவியாக இருக்கின்றது.மேலும் நமது உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும் உதவியாக இருக்கிறது.

மலச்சிக்கல் பிரச்சனை

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் சாப்பிட்ட பிறகு சிறிதளவு அத்தி பழத்தின் விதைகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் விரைவில் குணமடையும்.அதிக நாட்கள் மலச்சிக்கல் பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஐந்து அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமடையும்.

வாய் துர்நாற்றம்

அத்திப்பழத்தை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.மேலும் தலைமுடி நீளமாக வளரவும் உதவியாக இருக்கும்.அத்தி காய்களில் இருந்து வரும் பாலை வாயில் ஏற்படும் புண்ணில் தடவினால் வாய்ப்புண்கள் விரைவில் குணமடையும்.

ஆண்மையை அதிகரிக்க

தினமும் அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தை பெரும்.தினமும் ஐந்து முதல் பத்து வரை காலை மாலை என்று இரண்டு நேரம் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் பால் குடித்தால் உடலில் தாதுக்களை அதிகரிக்கும்.மேலும் ஆண் மலடு நீங்கி ஆண்மையை அதிகரிக்கவும் அத்திப்பழம் உதவியாக இருக்கிறது.

இதயம் பிரச்சினை

இதயம் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அத்திப்பழத்தை காயவைத்து அதனை பொடியாக செய்து காலை மாலை என்று இரண்டு வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கிவிடும்.

கல்லீரல் பிரச்சனை

மதுப்பழக்கம் மற்றும் பிற நோய்களினால் ஏற்படும் கல்லீரல் பிரச்சனையை போக்க அத்திப்பழத்தை வினிகரில் ஏழு நாட்கள் ஊறவைத்து பிறகு தினமும் அந்த அத்திப்பழத்தில் இரண்டை எடுத்து ஒருவேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விரைவில் குணமடையும்.

அத்திப்பழம் பயன்கள்
அத்திப்பழம் தீமைகள்

அத்திப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும்.இந்த அத்திப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருப்பதனால்.வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட காரணமாக இருக்கின்றது.வயிற்று வலி மற்றும் வயிற்று வீக்கத்தை கட்டுப்படுத்த சோம்பு நீர் அல்லது சீரக நீர் மூலம் வயிற்று வலியை போக்கலாம்.அது மட்டும் இல்லாமல் உங்களுடைய மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம்.

இதையும் படிக்கலாமே..

மாதுளை ஜூஸ் பயன்கள் | Mathulai Juice Benefits in Tamil
அவகோடா பழம் பயன்கள் | Avocado in Tamil
ப்ளூபெர்ரி பழம் தரும் நன்மைகள் | Blueberry Fruit in Tamil
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR