Homeமருத்துவம்ஆவாரம் பூ பயன்கள் மற்றும் தீமைகள் | Avaram Poo Benefits in Tamil

ஆவாரம் பூ பயன்கள் மற்றும் தீமைகள் | Avaram Poo Benefits in Tamil

TAMILDHESAM-GOOGLE-NEWS

ஆவாரம் பூ பயன்கள் மற்றும் தீமைகள்

வணக்கம் நண்பர்களே.!! கிராமத்து பக்கம் போனால் ஆவாரம்பூ செடியை அனைத்து இடங்களிலும் நம்மால் பார்க்க முடியும் எளிதில் கிடைக்கும் இந்த ஆவாரம் பூ மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் இருக்கிறது ஆவாரம் பூவின் மூலம் கிடைக்கும் நன்மை தீமைகளை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

ஆவாரம் பூ பயன்கள் 

ஆவாரம்பூ கிராமப்புற பகுதிகளில் மிகவும் எளிமையாக கிடைக்கும் பூவாகும் இந்த ஆவாரம் பூவில் பல மருத்துவ குணங்கள் உள்ளது.ஆவாரம் பூ சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகப் பிரச்சனை மற்றும் ஆண்குறியில் ஏற்படும் எரிச்சலை போக்கும்.

  • எளிதில் கிடைக்கும் இந்த ஆவாரம் பூவில் பல நன்மைகள் இருக்கிறது. முகம் பொலிவு பெறுவதற்கு எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல் காய்ந்த ஆவாரம் பூவை அரைத்து முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும்.
  • அதிகமான கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் துர்நாற்றம் அடிக்கும் உடலில் துர்நாற்றம் அடிக்காமல் இருப்பதற்கு ஆவாரம் பூவை அரைத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் உடலில் துர்நாற்றம் எதுவும் வராது. துர்நாற்றம் மட்டுமில்லாமல் உடம்பில் ஏற்படும் சொறி அரிப்பு போன்றவற்றையும் நீக்கும்.
  • நுண்ணுயிர்களின் மூலம் ஏற்படும் காய்ச்சல்களை போக்குவதற்கு ஆவாரம் பூவை சுடுதண்ணியில் போட்டு குடித்து வந்தால் காய்ச்சல் மட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
  • சிறுநீரக தொற்று நோயால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூவினால் செய்யப்பட்ட தேநீர் மற்றும் ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கிவிடும்.
  • ஆவாரம் பூவை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்கிவிடும் அது மட்டுமில்லாமல் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கிவிடும்.
  • ஆவாரம் பூ தேநீர் சாப்பிடுவதன் மூலம் எதிர்காலத்தில் மஞ்சள் காமாலை வருவதை தடுக்கும்.கல்லீரலில் ஏற்படும் நச்சுக்களை நீக்கிவிடும்.
  • பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது அதிகம் ரத்தப்போக்கு வெளியேறி வலியினால் துடித்துக் கொண்டிருப்பார்கள் இது போன்ற சமயங்களில் ஆவாரம் பூவை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் இது போன்ற பிரச்சனைகள் தீரும்.
ஆவாரம் பூ பயன்கள்
ஆவாரம் பூ

ஆவாரம் பூ முடி வளர 

முடி வளர்ச்சி இல்லாமல் இருப்பவர்கள் முடி கொட்டுகிறது மற்றும் முடி அடர்த்தி இல்லாமல் இருப்பவர்கள் எந்த ஒரு ரசாயன பொருட்களையும் பயன்படுத்த தேவையில்லை ஆவாரம் பூவின் மூலமாக இந்த பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம்.ஆவாரம் பூ,வெந்தயம், பயத்தம் பருப்பு ஆகிய மூன்றையும் கலந்து அறிந்து கொள்ளவும். அரைத்துக்கொண்ட பவுடரை சுடு தண்ணீரில் கரைத்து தலையில் வாரம் இரண்டு முறை தேய்த்து வந்தால் முடி சம்பந்தமான எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது.

ஆவாரம் பூ முகத்திற்கு 

ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு அதிலும் குறிப்பாக சொன்ன போனால் பெண்கள் முகம் அழகாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருப்பார்கள். அதற்காக பெண்கள் ரசாயனம் கலந்த பவுடர்களை பயன்படுத்துவார்கள் ரசாயனம் கலந்த பவுடர்களை பயன்படுத்தினால் பின்விளைவுகள் ஏற்படும்.

ரசாயனம் கலக்காமல் முகம் பொலிவு பெற ஆவாரம் பூவை பயன்படுத்தலாம்.முகம் பொலிவு பெற காய்ந்த ஆவாரம் பூ அரைத்து அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும் முகத்தில் உள்ள சோர்வுகள் நீங்கும்.

ஆவாரம் பூ சர்க்கரை 

ஆவாரம் பூ என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது சர்க்கரை நோய் தான் சர்க்கரை நோய்க்க ஆவாரம்பூ சாப்பிடுவதன் மூலம் நன்மை கிடைக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கான ஜீன் ஆவாரம் பூவில் இருக்கிறது.

ஆவாரம் பூ பொடி பயன்கள் 

ஆவாரம் பூவில் உள்ள பயன்களைப் போல ஆவாரம் பூவை காயவைத்து அதை பொடி ஆக்கி அரைத்து பயன்படுத்தினாலும் அதிலும் பல பயன்கள் உள்ளது.ஆவாரம் பூவை சாப்பிட்டாலும் சரி பூவை பொடி ஆக்கி சாப்பிட்டாலும் அதிலும் அதே நன்மைகள் உள்ளது பொதுவாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆவாரம் பூ பொடி செய்யப்பட்டு தினமும் தேநீர் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவை குறைக்கும்.

ஆவாரம் பூ பொடியை தினமும் பயன்படுத்தி வருவதனால் நம் உடலில் தேவை இல்லாமல் தங்கி இருக்கும் கொழுப்புகளை நீக்கி உடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.நம் சருமத்தில் ஏற்படும் சொறி சிரங்கு மற்றும் முகம் பொலி இல்லாமல் இருந்தால் ஆவாரம் பூவின் பொடியை கலந்து சருமத்தில் தடவி வந்தால் இது போன்ற பிரச்சனைகள் நீங்கிவிடும்.

முகம் பொலிவு பெற வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஆவாரம் பூவும் பொடியை முகத்தில் தடவினால் மிகவும் பொலிவாக இருக்கும்.ஆவாரம் பூவின் பொடியை சருமத்தில் தேய்ப்பதன் மூலம் விரைவில் முதுமை பெறுவதை தடுக்கும்.ஆவாரம் பூ மட்டுமில்லாமல் ஆவாரம் செடியில் உள்ள இலைகளை அரைத்து அதை நம் உடலில் ஏற்பட்ட காயங்களின் மீது தடவி வந்தால் விரைவில் காயங்கள் ஆறிவிடும்.

ஆவாரம் பூ பயன்கள் In Tamil

ஆவாரம் பூ பொடி எப்படி சாப்பிடுவது 

ஆவாரம் பூவே பச்சையாகவும் சாப்பிடலாம், ஆவாரம் பூவை காயவைத்தும் சாப்பிடலாம் அல்லது ஆவாரம் பூவை பொடியாக்கி தேநீர் குளிர்பானம் போன்றவற்றை தயாரித்தும் சாப்பிடலாம்.பொதுவாக ஆவாரம் பூவை எந்த முறையில் சாப்பிட்டாலும் அதில் பல நன்மைகள் நமக்கு இருக்கிறது.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவை காயவைத்து பொடி ஆக்கி வைத்துக் கொண்டு தினமும் ஆவாரம் பூ தேநீர் குடித்து வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.

ஆவாரம் பூ தீமைகள் 

இயற்கையாக கிடைக்கும் ஆவாரம் பூவில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்க தான் செய்கிறது அந்த வகையில் ஆவாரம் பூவை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது கல்லீரல் பாதிப்பு,நரம்பு பாதிப்பு போன்ற நோய்கள் வரும் அது மட்டுமல்லாமல் ஆவாரம் பூவை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் கோமா ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கிறது.

வயிறு சம்பந்தமான நோய்கள் அதாவது அல்சர்,குடல் பாதிப்பு,வயிற்றுப்போக்கு வயிற்று எரிச்சல் போன்ற நோய்களை அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூவை எடுத்துக் கொள்ள வேண்டாம் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி ஆவாரம் பூவை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

Read Also:

திரிபலா சூரணம் பக்க விளைவுகள்

தேங்காய் பால் நன்மைகள் தீமைகள்

Spinach In Tamil-கீரை வகைகள்

கருஞ்சீரகம் முடி பயன்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

MOST POPULAR

Recent Comments

நல்ல நேரம் இன்று
கனவு பலன்கள் Png