Homeதமிழ் கட்டுரைகள்ஔவையார் பற்றிய வரலாறு | Avvaiyar History In Tamil

ஔவையார் பற்றிய வரலாறு | Avvaiyar History In Tamil

ஔவையார் பற்றிய வரலாறு | Avvaiyar History In Tamil

வணக்கம் நண்பர்களே.!!சங்ககாலத்தில் பல ஆண் புலவர்களை பற்றி நாம் கேள்வி பட்டியிருப்போம் அவர்களை பற்றியும் பெருமையாக பேசி இருப்போம் ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை என்று காட்டும் வகையில் சங்க காலத்திலே இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் ஔவையார்.

- Advertisement -

ஔவையார் ஆசிரியர் குறிப்பு

ஔவையார் ஆறு காலங்களில் வாழ்ந்துள்ளார்கள் அதில் நம் பெரும்பாலும் பேசப்படுவது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் பற்றி தான்.காலத்தை பொருத்து அவ்வையாரின் புகழ் மற்றும் வாழ்ந்த காலங்கள் மாறுபடும்.

காலம் குறியீடு காலம்  புகழ் பாடல்கள்
சங்க காலம் 2-ஆம் நூற்றாண்டுக்கு முன் சங்ககாலப் புலவர் அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை
இடைக்காலம் 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் அங்கவை சங்கவைக்கு மணம் முடித்து வைத்தவர்
சோழர் காலம் 12-ஆம் நூற்றாண்டு அறநூல் புலவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை
சமயப் புலவர் 14-ஆம் நூற்றாண்டு நூல் புலவர் ஔவை குறள், விநாயகர் அகவல்
பிற்காலம் – 1 16,17-ஆம் நூற்றாண்டு கதையில் வரும் புலவர்
பிற்காலம் – 2 17,18-ஆம் நூற்றாண்டு சிற்றிலக்கியப் புலவர் பந்தன் அந்தாதி

ஔவையார் பெயரின் பொருள்

ஔவையார் என்பதில் ஔவை அல்லது அவ்வை என்ற சொல் அவ்வா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்று பலரின் கருத்தாக இருக்கிறது. அவ்வை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்று பழந்தமிழ் அகராதியில் கூறுகிறது.அவ்வை என்பது முதிர்ச்சி அடைந்தவர்களை குறிக்கும் சொல்லாக விளங்குகிறது.

ஔவையார் பற்றிய வரலாறு | Avvaiyar History In Tamil
ஔவையார் பற்றிய வரலாறு

ஔவையார் சிறப்புகள்

ஔவையார் தனது வாழ்வில் பல நற்பணிகளை ஆற்றி சென்றுள்ளார். மக்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக வாழ்வின் தத்துவங்களை ஒரு வரி கவிதைகளாக எழுதி மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்தவர் தான் ஔவையார்.

சங்ககால ஔவையார் 

பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஔவையார் சங்ககால அவ்வையார் தான் இருக்கிறார்கள். அவர்களை நம் கற்பனையில் முதிர்ந்தவர்களாக நினைத்துக் கொண்டிருக்கும் சங்க கால ஔவையார் இளமை ததும்பும் பெண்ணாக இருந்தார்கள். இவர் பாடிய 59 பாடல்கள் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. அகநானூறு,குறுந்தொகை,நற்றிணை,புறநானூறு ஆகிய தொகுப்பு நூல்களில் அவை உள்ளனர்.சங்ககாலத்தில் புகழ்பெற்ற புலவராக ஔவையார் திகழ்ந்தார்.

- Advertisement -

ஔவையார் ஆத்திசூடி வரிகள்

ஔவையார் எழுதிய ஆத்திச்சூடி ஒவ்வொரு வரிகளுக்கும் ஒவ்வொரு விளக்கங்கள் உள்ளது.

“அறஞ் செய விரும்பு

- Advertisement -

ஆறுவது சினம்

இயல்வது கரவேல்

ஈவது விலக்கேல்

உடையது விளம்பேல்

ஊக்கமது கைவிடேல்

எண் எழுத்து இகழேல்

ஏற்பது இகழ்ச்சி

ஐயம் இட்டு உண்

ஒப்புரவு ஒழுகு

ஓதுவது ஒழியேல்

ஔவியம் பேசேல்

அஃகஞ் சுருக்கேல்”

இவர்களை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

புத்தர் வாழ்க்கை வரலாறு
Puli Thevar History in Tamil
ராஜ ராஜ சோழன் வரலாறு பற்றிய முழு விவரம் 
கம்பர் பற்றிய முழு விவரம்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR