வாழை மரத்தின் பயன்கள் | Banana Tree Benefits in Tamil
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் வாழை மரத்தின் மூலம் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்க இருக்கிறோம்.ஒரு வாழை மரத்தின் அடி முதல் நுனி வரை இருக்கும் அனைத்தும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது.ஒரு வாழை மரத்தில் இருக்கும் பூ பழம் தண்டு காய் இலை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கின்றது.ஒரு மரமே மருத்துவ குணம் நிறைந்த மரம் என்றால் அது வாழை மரம் தான்.இதில் அதிகம் மருத்துவ பயன்கள் ஏராளமாக இருக்கின்றன.ஆனால் ஒரு சிலர் இதனுடைய துவர்ப்பு சுவையினால் இதனை அதிகம் சாப்பிட மாட்டார்கள்.மேலும் இதனுடைய மருத்துவ பயன்களை பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாழை மரத்தின் பாகங்கள்
- விதை
- வேர்
- தண்டு
- இலை
- மஞ்சரி
- பூக்கள்
- பூவின் புறவட்டம்
- ஆண் பூ
- பெண் பூ
- காய்
- பழம்
வாழை மரத்தின் பயன்கள்
சிறுநீர் பிரச்சனை
சிறுநீர் பிரச்சினை இருப்பவர்கள் வாழைத்தண்டை சாப்பிட்டால் சிறுநீர் பிரச்சினைகள் நிறைவில் குணமாகும்.மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவியாக இருக்கிறது.வாழைத்தண்டை ஜூஸ் செய்து குடித்தால் சிறுநீரக கற்கள் கரைந்து சிறுநீர் சீராக வெளியேற உதவியாக இருக்கும்.வாழைத்தண்டு ஜூஸ் உடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை தடுக்க உதவியாக இருக்கும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாழைத்தண்டு சாற்றை வடிக்கட்டாமல் குடித்து வந்தாள் சக்கரை நோய் இருப்பவர்கள் விரைவில் குணமடைவார்கள்.மேலும் இதில் அதிகம் நார்ச்சத்து இருப்பதனால் இன்சுலினை கட்டுப்படுத்தி இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
உடல் எடையை குறைக்க
வாழைத்தண்டில் அதிகம் நார்ச்சத்து இருப்பதனால் உடலில் எடையை குறைக்க உதவியாக இருக்கிறது.மேலும் வாழைத்தண்டின் ஜூஸ் குடிப்பதனால் உங்களுடைய தொப்பையை குறைத்து பசி எடுக்காமல் தடுக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
வாழைத்தண்டு ஜூஸை வாரத்திற்கு மூன்று முறை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதனால்.உடலை வலுவடைய செய்கின்றது.மேலும் உடலை வலிமையாக வாழைத்தண்டு ஜூஸில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் பிரச்சனை
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதினால் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவியாக இருக்கிறது.மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.உடலில் புத்துணர்ச்சி பெறுவதற்கும் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும் வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் விரைவில் இந்த பிரச்சனைகள் தீரும்.
ரத்த சோகை பிரச்சனை
ரத்தம் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோக பிரச்சனையை சரி செய்வதற்கு வாழைத்தண்டு சாற்றை இரண்டு முறை தினமும் குடித்து வந்தால் ரத்த சோகை பிரச்சனை விரைவில் குணமடையும்.மேலும் வாழைத்தண்டை உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் காமாலை நோய் விரைவில் குணமாகும்.
விஷ முறிவு
பாம்பு கடித்து விட்டால் வாழை மட்டை சாற்றில் அரை டம்ளர் அளவு அதனுடன் தும்பையிலே சாற்றில் அரை டம்ளர் அளவு எடுத்துக் கொண்டு அதனை நன்றாக கலந்து கொடுத்தால் பாம்பு விஷத்தை முறித்து விடும்.
வாழை மரத்தின் சிறப்புகள்
வாழை மரத்தில் இருக்கும் மற்ற சிறப்புகள் என்னவென்றால் அழுகிப்போன வாழைப்பழ கழிவுகள் அனைத்தும் காகிதமாக மாற்றப்படுகின்றது.மேலும் வாழை இலைகளைக் கொண்டு பட்டு போன்ற மென்மையான துணிகளை செய்கின்றன.இது கிமானோ ஆடைகளை தயாரிக்கவும்,கம்பளம் தயாரிக்கவும் வாழை இலைகள் பயன்படுகின்றது.
வாழை மரத்தின் தீமைகள்
மூட்டு வலி,கை,கால் வலி போன்றவர்கள் வாழைக்காயை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அவ்வாறு செய்தால் பல நோய்கள் வருவதை விரைவில் தடுக்க முடியும்.
இதையும் படிக்கலாமே..
வேப்பிலை பயன்கள் | Veppilai Benefits in Tamil |
இஞ்சி பயன்கள் | Gingelly Oil In Tamil |
செவ்வாழை பயன்கள் | Sevvalai Benefits in Tamil |