வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் நமது வங்கி கணக்கை முடிப்பது எப்படி கடிதம் எழுதுவது என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.பெரும்பாலான மக்கள் அனைவரும் வங்கி கணக்குகளை முறையாக பயன்படுத்துவதில்லை தேவையில்லாத வங்கி கணக்குகளை ரத்து செய்வது இல்லை.பணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் வங்கி கணக்கு தேவையாக இருக்கிறது இதனால் பல்வேறு காரணங்களினால் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்பார்கள்.ஒருவர் வேலை மாற்றம் செய்யும்பொழுது புதிய வங்கி கணக்குகளை அதுமட்டுமில்லாமல் வேறு சில காரணங்களில் கூட வங்கி கணக்குகள் தொடங்குகின்றனர்.பெருமாளான மக்கள் அந்த வங்கி கணக்குகளை முறையாக பராமரிப்பதில்லை.
இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும்.அதாவது வங்கி கணக்கில் இருந்து பணம் அனைத்தையும் எடுத்துவிட்டு பிறகு அந்த வங்கி கணக்கில் எந்தவிதமான பரிமாற்றமும் மேற்கொள்ளவில்லை என்று கூறுவார்கள்.இதனால் குறைந்தபட்ச பராமரிப்பு தொகை மட்டுமே வசூலிக்கப்படும் அடுத்தது ஏடிஎம் கார்டு வைத்து இருந்தால் அதற்கு ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டும்.இப்படி செலுத்தப்படாத வங்கி கணக்கை நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படும் அபாயமும் ஏற்படும் என்பதனால் தேவையில்லாத வங்கி கணக்கு உடனடியாக முடக்குவது நல்லது.மேலும் வங்கி கணக்கை முடிப்பதற்கு வங்கி மேலதிகாரிக்கு கடிதம் எழுதுவது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
Bank Account Closing Letter in Tamil
அனுப்புநர்
கணக்கு வைத்திருப்பவர் பெயர்
தெரு பெயர்
வசிக்கும் இடம்
பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்
வங்கி பெயர்
வசிக்கும் இடம்
மதிப்புக்குரிய ஐயா/அம்மா
பொருள்:என்னுடைய வங்கி கணக்கை முழுவதுமாக முடித்து வைக்க வேண்டுதல் தொடர்பான விண்ணப்பம்.
வணக்கம் நான் உங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறேன்.என்னுடைய சேமிப்பு கணக்கை எண் XXXXXXXXXX .நான் சொந்த காரணங்களுக்காக உங்களுடைய வங்கியில் சேமிப்பு கணக்கை தொடர்வதற்கு விருப்பமில்லை.எனவே என்னுடைய வங்கி கணக்கை முடித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் என்னுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு தாழ்ந்த மனப்பான்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாள்:
வசிக்கும் இடம்:
இப்படிக்கு
XXXX
இதையும் படிக்கலாமே..
Aram Tamil Meaning | தமிழ் விளக்கங்கள் |
ilavasam Veru Sol | இலவசம் வேறு சொல் |
Determination Meaning In Tamil | தமிழ் விளக்கங்கள் |