Barley In Tamil | பார்லி
வணக்கம் நண்பர்களே அரிசியில் பல வகை உள்ளது பெரும்பாலும் நாம் கேள்விப்பட்டிருக்கும் அரிசி நெல்லில் எடுக்கப்படும் அரிசியாக தான் இருக்கும் இதைதான் நம் உணவுக்காக பயன்படுத்துகிறோம் இது மட்டும் இல்லாமல் சிவப்பு அரிசி குதிரைவாலி அரிசி வரகு அரிசி போன்ற அரிசிகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
பார்லி அரிசி பெரும்பாலும் யாரும் கேள்வி பட்டு இருக்க மாட்டார்கள்.பார்லி அரிசியில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது அது என்னவென்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Barley In Tamil Name :பார்லி
பார்லி அரிசி நன்மைகள்
பார்லி அரிசி நான் செய்யப்பட்ட உணவுகளில் அதிக அளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.அது மட்டும் அல்லாமல் இரத்த சர்க்கரை நோயை மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.
பார்லி கஞ்சி பயன்கள்
பார்லி அரிசியில் கஞ்சி செய்து சாப்பிட்டால் பல நன்மைகள் இருக்கிறது பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆனா தான் மற்ற உணவுகளை சாப்பிட தோணும் மற்றும் எந்த வேலையாக இருந்தாலும் செய்ய தோணும் பார்லி அரிசி கஞ்சியை குடித்தால் செரிமான கோளாறு பிரச்சனைகள் சரியாகும்.
அது மட்டுமில்லாமல் தினந்தோறும் பார்லி அரிசி கஞ்சியை குடித்தால் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உடல் எடையை குறைப்பதற்கும் உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கிறது. உடலில் தேவையில்லாத கொழுப்புகளை தங்குவதையும் தடுக்கிறது.
பார்லி தண்ணீர் பயன்கள்
பார்லி அரிசியில் செய்யப்படும் கஞ்சி மற்றும் தண்ணீரிலும் பல பயன்கள் உள்ளது பார்லி தண்ணீரில் குளிப்பதனால் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் வராது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உடல் எடை கூடிக் கொண்டு போகும்போது பார்லி தண்ணீரை குடிப்பதன் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அது மட்டுமில்லாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள் பார்லி தண்ணீர் குடிப்பதன் மூலம் தாய்ப்பால் அதிக அளவு சுரப்பதற்கு பார்லி தண்ணீர் உதவியாக இருக்கிறது.
பார்லி அரிசி மற்றும் கஞ்சி தீமைகள்
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் எந்த அளவு நன்மைகள் இருக்கிறதோ அந்த அளவு தீமைகளும் இருக்கும் அதனால் எந்த ஒரு பொருளையும் அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளக் கூடாது அந்த வகையில் பார்லி அரிசியிலும் தீமைகள் இருக்கிறது. பார்லி அரிசியில் மூலம் எடுக்கப்படும் மாவு ஆஸ்துமா வருவதற்கும் காரணமாக இருக்கிறது.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முளைகட்டிய பார்லியை சாப்பிடக்கூடாது.பார்லி உணவுப் பொருட்கள் சாப்பிடும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது பாதுகாப்பானது என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே..
தூதுவளை பயன்கள் மற்றும் தீமைகள் | Thuthuvalai Benefits in Tamil |
அதிமதுரம் பயன்கள் மற்றும் தீமைகள் |
வெந்தயம் தீமைகள் மற்றும் பயன்கள் |
Foxtail Millet Tamil | தினையின் பயன்கள் |