பாரதியார் பற்றிய முழு விவரம் | Bharathiyar History in Tamil
Bharathiyar:வணக்கம் நண்பர்களே.!! பாரதியார் என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவுக்கு பாரதியாரின் புகழ் நாடு முழுவதும் பரவி உள்ளது.பாரதியாரின் கவிதைகள் மற்றும் பாடல்களை கேட்காமலும் படிக்காமலும் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.
பெண்கள் தனியாக ஒரு விஷயத்தை செய்தால் அந்த பெண்ணை பாரதி கண்ட புதுமைப்பெண் என்று அழைப்போம் அப்பேர்ப்பட்ட பாரதியார் அவர் எங்கு பிறந்தார் எப்போது பிறந்தார் அவரின் பெற்றோர்கள் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பற்றி நிறைய பேருக்கு தெரியாமல் தான் இருக்கிறது பாரதியார் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவின் மூலம் நாம் பார்ப்போம்.
பாரதியார் பற்றிய குறிப்புகள் தமிழ்
சின்ன சுவாமி சுப்ரமணிய பாரதி எனும் இயற்பெயரைக் கொண்ட கவிஞர், எழுத்தாளர்,இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.இவரை பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கப்படுகின்றனர். சின்னசாமிய சுப்பிரமணி பாரதி என்பவர் பாரதியார் என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும்.
பாரதியார் தனது சிறப்பான எழுத்துக்கள் மூலம் மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.பாரதியார் பல தமிழ் கவிதைகளையும் உரைநடைகளையும் சிறப்பான புலமைக் கொண்டு நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்தியா விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு ஆப் பண்ணிட்டியா பல்வேறு சமயங்கள் குறித்து பல கவிதைகள் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
எட்டப்ப நாயக்கர் மன்னர் கவித்திறனை மெச்சி கலைமகள் என பொருள் படும் பாரதி எனும் பட்டத்தை வழங்கிய பாரதியாருக்கு வழங்கினார்.பாரதியாரின் நூல்கள் 1949 ஆம் ஆண்டு தமிழக மாநில அரசினால் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.இந்தியாவிலேயே முதன்முறையாக பாரதியாரின் நூல்கள் தான் நாட்டின் ஆக்கப்பட்ட இலக்கியம் ஆகும்.
இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் பாரதியாரை புகழ்ந்துள்ளார்.பாரதியார் அப்பொழுதே ஆணும் பெண்ணும் சமமாக இருக்க வேண்டும் என்று கூறினார். பெண்களும் ஆண்களைப் போல துணிச்சலாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
பாரதியார் பெற்றோர் பெயர்
சின்ன சுவாமி சுப்ரமணிய பாரதி இயற்பெயரைக் கொண்ட இவர் சின்னசாமி அய்யர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பாரதியாரின் தாயார் 1887 ஆம் ஆண்டு மறைந்து விட்டாள். பாரதியார் தனது தாயார் மறைவுக்குப் பிறகு தனது பாட்டி பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.பாரதியாருக்கு பல பெயர்கள் இருந்தாலும் அவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும் அவரை சுப்பையா என்று தான் அழைக்கப் பட்டார்.
பாரதியார் பிறந்த ஆண்டு In Tamil
பாரதியார் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11 1882 ஆம் ஆண்டு பிறந்தார்.
பாரதியார் பிறந்த மாவட்டம் மற்றும் ஊர் In Tamil
பாரதியார் டிசம்பர் 11 1882 ஆம் ஆண்டு தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் (தற்பொழுது தூத்துக்குடி மாவட்டம்) எட்டையாபுரத்தில் பிறந்தார்.
Bharathiyar Images Hd
பாரதியார் மனைவி பெயர்
பாரதியார் 1897 ஆம் ஆண்டு செல்லாமாளை திருமணம் செய்து கொண்டார்.பாரதியார் செல்லம்மாள் தம்பதியினருக்கு தங்கம்மாள்,சகுந்தலா என இரு மகள்கள் உள்ளனர்.
பாரதியார் சிறப்பு பெயர்கள்
பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன் என்ற பல வேறு பெயர்கள் பாரதியாருக்கு இருக்கிறது.இது மட்டுமல்லாமல் மகாகவி மக்கள் கவிஞர் தேசிய கவி தமிழ் கவி என பல சிறப்பு பெயர்களும் பாரதியார் உண்டு.
பாரதியார் வரலாறு தமிழ்
சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11, 1882-இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார்.பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும் இவரை சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.
1887 தனது தாயின் மறைவுக்குப் பிறகு தனது பாகீரதி அம்மாவிடம் வளர்ந்தார்.பாரதியார் தனது 11 வயதில் பள்ளியில் படித்துக் கொண்டு வரும் பொழுது கவி புண்ணியம் ஆற்றலை வெளிப்படுத்தினார்.பாரதியார் செல்லம்மாள் என்பவரை 1897 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு தான் செய்து கொண்டிருந்த தொழிலில் 1898 ஆம் ஆண்டு நஷ்டம் அடைந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பாரதியார் வறுமையை சமாளிப்பதற்காக எட்டயபுரம் மன்னருக்கு பொருள் உதவி வழங்கும் மறு கடிதம் ஒன்று எழுதி அனுப்பினார் பின்னர் பாரதியாருக்கு எட்டையாபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது.தனது பணியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த பாரதியார் சிறிது காலத்திற்குப் பிறகு அந்த பணியை விட்டு காசிக்கு சென்றார்.
காசியில் 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். எட்டையாபுரம் அரண்மனை மன்னரால் பாரதியார் அழைத்துவரப்பட்டு அரண்மனை ஒன்றில் வாழ்ந்து வந்தார்.பாரதியார் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் பாடல்கள் எழுதாமல் இருந்தார் 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் விவேகா பானு இதழில் வெளியானது.
அதைத்தொடர்ந்து பாரதியார் தான் வாழ்நாள் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் இதழ் ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் பாரதியார் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை தமிழ் மொழி பெயர்க்கவும் செய்தார்.
பாரதியார் கவிதைகள் தமிழ் | Bharathiyar Kavithaigal in Tamil
பாரதியார் பல கவிதைகள் எழுதி உள்ளார் வேறு மொழி கவிதைகளையும் தமிழில் மொழி பெயர்த்தும் உள்ளார்.பாரதியாரின் சில கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”
பாரதியார் பாடல் வரிகள் தமிழ்
பாப்பா பாட்டு கண்ணன் பாட்டு குயில் பாட்டு மற்றும் பல பாட்டுகளை பாரதியார் எழுதியுள்ளார்.
“ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!
சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!
பாரதியார் மறைந்த ஆண்டு
பாரதியார் 1929 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருநெல்வேலி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு நோய்வாய் பட்டார். யானையால் தாக்கப்பட்ட பாரதியார் சில நாட்களுக்குப் பிறகு கடும் வயிற்று கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாரதியார் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அதிகாலை 1.30 மணி அளவில் காலமானார்.பாரதியார் கடைசியாக வாழ்ந்த வீடு திருவல்லிகேணியில் உள்ளது.
Read Also:
திருவள்ளுவர் பற்றிய முழு விவரம் | Thiruvalluvar History in Tamil
கம்பர் பற்றிய முழு விவரம் | Kambar History in Tamil
வள்ளலார் வரலாறு | Vallalar History in Tamil
ராஜ ராஜ சோழன் வரலாறு பற்றிய முழு விவரம்