இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Happy birthday Wishes in Tamil
ஒரு மனிதன் தாயின் கருவறையில் இருந்து இந்த பூமிக்கு வந்து அடையும் நாள் பிறந்தநாள் என்று அழைக்கப்படுகிறார்கள் இந்த பிறந்த நாளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறார்கள் பணம் உள்ளவர்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார்கள் பணம் இல்லாதவர்கள் கூட மிகவும் எளிமையான முறையில் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
அந்த பிறந்த நாளை கொண்டாடுவதற்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருவார்கள் அதற்கு நாங்கள் கீழே பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறும் கவிதைகளை வழங்கி உள்ளோம் இதை நீங்கள் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த கவிதையை அனுப்பலாம்.
பிறந்தநாள் கொண்டாடும் உன் நண்பர்களுக்கு பிறந்தநாள் கவிதைகளை நீங்கள் அனுப்பி சந்தோசமாக இருங்கள் உங்கள் நண்பர்கள் சந்தோஷமாக இருப்பார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை:
Happy Birthday Wishes in Tamil
புது நாள்
புது வருடம்
புது அனுபவம்
இவையெல்லாம் இன்னும்
சிறப்பாக அமையட்டும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன் பிறந்தநாளைப் பார்த்து
மற்ற நாட்களெல்லாம்
பொறாமைப்படுகிறது.
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்கள் கனவுகள், எண்ணங்கள்
அனைத்தும் நிறைவேறும் படி
இந்த பிறந்தநாள் அமைந்திட
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உண்மையான அன்பு வார்த்தைகளால்
சொல்ல முடியாது. உணர்ச்சிகளினாலும்
எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Birthday Wishes in Tamil for Girlfriend/Boyfriend
உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற
உனது இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நட்புக்கு இலக்கணமே நீதான்
என்று சொன்னால் அது மிகையாகாது.
நண்பருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவை இல்லை,
முகவரியும் தேவை இல்லை,
நம்மை நினைக்கும் உண்மையான
நினைவுகள் போதும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
சின்ன சின்ன சந்தோசங்கள்
வாழ்க்கையை அழகாக்குமாம்.
உன் பிறந்தநாளும் அப்படிதான்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன் கனவுகள் நிகழ்வுகளாய் மலர,
உன் உள்ளம் அன்பால் நிறைய,
உன் உடல் இளமையாக ஜொலிக்க,
இந்த பிறந்தநாள் அமையட்டும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நான் வாடிய தருணங்களில் எல்லாம்
எனக்காக எப்போதும் ஆறுதலாய் இருக்கும்
அன்பு உள்ளத்துக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Birthday Wishes in Tamil for Appa
உலகிலேயே மிகச் சிறந்த நபரான
என் அப்பாவிற்கு என்னுடைய
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்கள் மீது நான் வைத்திருக்கும்
அன்பையும் பாராட்டையும்
வார்த்தைகளால் விவரிக்க இயலாது..
இந்த பிறந்தநாளில் உங்களை வணங்குகிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா.
என்னுடன் துணை நின்று
என் எல்லா கனவுகளும்
நிறைவேற உதவி புரிவதற்கு நன்றி..
உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற
இறைவனை வேண்டுகிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா.
எளிமையின் சிகரமான அன்பு அப்பாவிற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Birthday Wishes in Tamil for Amma
அம்மா என்று பெயரெடுக்க
ஐஇரு திங்கள் சுகச்சுமை சுமந்த
உங்களின் பிறந்தநாளன்று வணங்கி மகிழ்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.
பாசாங்கில்லாத பாசத்தைப்
பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் எங்கள் அம்மாவிற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அம்மா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும்,
நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும்
எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு மிக்க நன்றி..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.
உள்ளொன்று வைத்து புறமோன்று
பேசாப் பேதையான என் அம்மாவிற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உலகிலேயே அதிக பாசமுள்ள என் அம்மாவிற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்களை தாயாக நான் அடைந்ததற்கு
அடையும் மகிழ்ச்சியை
வார்த்தைகளால் விவரிக்க முடியாது!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Birthday Wishes in Tamil for Husband/Wife
உன் பிறந்தநாளுக்கு
அன்பளிப்பு தேடித்தேடி
தொலைந்தே போனேன்.
கடைசிவரை கிடைக்கவில்லை எனக்கு,
உன்னைவிட விலைமதிப்பான பரிசு..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நம் வாழ்க்கை அழகாய் மாறுகிறது
நாம் அன்பு காட்டும் போதும்,
அன்பைப் பெறும்போதும்.
அப்படி என் வாழ்க்கையை
அழகூட்டுகிற உனக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்
என்னுடன் துணையாய் பயணிக்கும்
அன்பு உள்ளத்திற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என் விழியில் கலந்த உறவே
என் உயிரில் கலந்த உணர்வே
வாழும் காலமெல்லாம் உன்னோடு
நான் வாழும் வரம் தந்திடுவாயே
என் துணையே, இணையே, உயிரே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Birthday Wishes in Tamil for Lover
வெள்ளை உள்ளமே..
கொள்ளை அழகே..
உதிரும் புன்னகை,
உரித்தாகட்டும் உனக்கே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த உலகிலேயே சிறந்த நபருக்கு
எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என் வாழ்வின் அன்பான காதலிக்கு / காதலனுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் எப்போதுமே எனக்காகவே இருந்திருக்கிறீர்கள்,
நான் எப்போதும் உங்களுக்காகவே இருப்பேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
எதற்கும் மறுகாத என்நெஞ்சும் உருகுதடி,
உன் மையல் கொண்ட புன்சிரிப்பினிலே அன்பே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன் பேச்சின் இனிமைகளை
என் செவிகள் சுவைக்கப் பெற்றேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.