வணக்கம் நண்பர்களே.!!மனிதனாக பிறந்ததிலிருந்து இறப்பது வரை பல நோய்கள் நமக்கு வரும். ஒவ்வொரு நோய்க்கும் நம் மருத்துவமனை சென்று கொண்டிருந்தால் நமக்கு பணம் தான் செலவாகும்.அதனால் இயற்கை முறையில் சில நோய்களை சரி செய்து கொள்ளலாம். பொதுவாக சாப்பிடும் பொழுது அதிக கலோரிகள் இருக்கும் உணவுகளை தான் சாப்பிடுவோம்.
உடலுக்கு தேவையான கலோரிகளை எடுத்துக்கொண்டு மீதமுள்ள கலோரிகளை கொழுப்பாக சேமித்து வைத்துக் கொள்ளும் அதனால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் அதிகரித்து உடல் பருமன் ஆகும்.சாதாரணமாக உடல் எடை அதிகரித்தால் உடனடியாக குறைப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கிறது இளநீர் சாப்பிட்டால் எப்படி உடல் எடை குறையும் என்பதை பார்ப்போம்.
இளநீரில் இருக்கும் மருத்துவ பயன்கள்
உடல் எடை குறைப்பதற்கு மற்றும் இளநீர் பயன்படவில்லை. இளமையில் பல மருத்துவ குணங்கள் உள்ளது வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே ஒரு சிலருக்கு நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
நீரிழப்பு பிரச்சனை வந்தால் உடல் சோர்வாகி,தலைச்சுற்றல், சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பார்கள் அதனால் வெயில் காலத்தில் இளநீர் குடித்து வந்தால் உடலுக்கு நீரிழிவு பிரச்சினைகள் வராமல் இருக்கும் அது மட்டுமல்லாமல் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.ஒரு சிலருக்கு வயிற்றுப்புண்,வாய்ப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.
பெரும்பாலும் மலச்சிக்கல் பிரச்சனை வெயில் அதிகமாக இருப்பதால் உடல் சூடாகி மலச்சிக்கல் ஏற்படும் அதனால் உடலை வெயில் காலத்தில் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அதற்காக தினமும் ஒரு இளநிர் குடித்து வந்தால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
அதேபோன்று வயிற்றுப்புண் வாய்புண் அடிக்கடி வருபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் வயிற்றுப்புண் வாய்ப்புண் சரியாகிவிடும். தினமும் இளநீரை சாப்பிடுவதற்கு கடுப்பாக இருந்தால் தேங்காயை துருவி அதை அரைத்து தேங்காய் பாலாகவும் குடிக்கலாம் அல்லது வெறும் தேங்காயவை சாப்பிட்டு வந்தாலும் வயிற்றுப்புண் வாய்புண் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.
எடை குறைப்பதற்கு இளநீர் குடிக்கும் முறை
பொதுவாக இளநீரில் அதிக ஊட்ட சத்துக்கள் இருப்பதால் இளநீரை நினைத்த நேரத்தில் குடிக்கலாம் ஆனால் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். சரியான நேரத்தில் இளநீரை குடித்தால் மட்டுமே உடல் எடை குறையும்.என்னதான் இளநீரில் அதிக ஊட்ட சத்துக்கள் இருந்தாலும் இளநீரில் குறைந்த அளவு கலோரி தான் இருக்கிறது.
அதனால் இளநீரை குடித்தால் உடல் எடை அதிகரிக்காது. இளநீரை குடிப்பதன் மூலம் செரிமானம் சரியான முறையில் நடக்கும். இளநீரை குடித்தால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் வயிறு நிறைந்தது போலவே இருக்கும்.
ஒரு நாளைக்கு முடிந்த அளவு 2 முதல் 3 இளநீர் குடித்தால் பசி எடுக்காமல் இருக்கும். அதனால் நம் உடம்புக்கு தேவையான கலோரிகள் மட்டுமே இளநீர் மூலமாக எடுத்துக் கொள்ளும் தேவையில்லாத கொழுப்புகள் அதாவது உடல் எடை அதிகரிக்காமல் உடல் எடை வேகமாக குறையும்.
இளநீரில் உள்ள ஊட்டசத்துக்கள்
இளநீரில் வைட்டமின் சி,ஈ,பி 1, பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்ற அதிக ஊட்டச்சத்துக்கள் என நீரில் உள்ளது அது மட்டும் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு தாய்மார்கள் கொடுக்கும் பாலில் உள்ள புரத சாத்துக்கு இணையாக இளநீரிலும் புரத சத்து உள்ளது.இளநீரில் அதிக அளவு ஊட்டச்சத்து இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.