கஷ்கொட்டை விளக்கம் | Chestnut In Tamil
கஷ்கொட்டை என்பது ஒரு சுவை மிகுந்த கொட்டைகளை தரும் மர இனமாகும்.இவற்றின் கொட்டைகளையும் குறிக்கின்றது இது சத்து மிகுந்த ஒன்று இதனை தணலில் வேக வைத்து சாப்பிடுவார்கள்.கஷ்கொட்டையை பச்சையாகவும் வருத்தது ஒளியாக்கிய அல்லது சமையலில் சேர்த்து சாப்பிட முடியும்.
இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவுகளில் பயன்படுத்தப்பட்ட வருகின்றது.கஷ்கொட்டை மரத்தின் மற்றொரு பெயர் ஜெனஸ் காஸ்டானியா.இதனை ஆங்கிலத்தில் செஸ்ட் நட்ஸ் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த மரம் உலகில் எங்கும் மலர்ந்தாலும் அதை வளரும் பகுதிகளுக்கு ஏற்ப 4 வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.அவை சீன கஷ்க்கொட்டை ஜப்பானிய கஷ்க்கொட்டை ஐரோப்பிய கஷ்க்கொட்டை மற்றும் அமெரிக்கா கஷ்கொட்டை போன்ற இடங்களில் கிடைக்கின்றது.
Chestnut Benefits
இதய பிரச்சனை
கஷ்கொட்டையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற இதய பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற உதவியாக இருக்கின்றது.
செரிமான பிரச்சனை
கஷ்கொட்டையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் இது சிறந்து விளங்குகிறது.மேலும் நார்ச்சத்து குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவியாக இருக்கிறது.
செலியாக் நோய் பிரச்சனை
கஷ்கொட்டையில் பசை இருக்காது.எனவே இதில் செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் சிறந்ததாக இருக்கும்.
நீரிழிவு நோய் பிரச்சினை
கஷ்கொட்டையில் இருக்கும் நார்ச்சத்து ரத்த சக்கரையை சமமாக்கிறது.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது உடல் மாவு சத்தை உறிஞ்சுவதை மெதுவாக்குகின்றது.இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு திடீரென்று உயர்வதை தடுக்கின்றது.மேலும் இதனுடைய கிளைசெமிக் குறியீட்டு மதிப்பு 54 ஆகும்.இதுபோன்று குறைந்த விலை சென்னை குறியீடு கொண்ட உணவுகள் சாப்பிடும் பொழுது ரத்த சர்க்கரை அளவுகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
உடல் எடை பிரச்சனை
கஷ்கொட்டையில் அதிகம் நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் மற்றும் குறைந்த கொழுப்புகள் இருக்கின்றது.எனவே மற்றொரு கொட்டைகளுடன் ஒப்பிடும் பொழுது பசியை கட்டுப்படுத்தி மேலும் அதிக கலோரிகளால் உடல் எடையை கூடும் வாய்ப்பை குறைக்கின்றது.
கஷ்கொட்டையில் இருக்கும் சத்துக்கள்
கலோரிகள்:புரதம் 2.7 கிராம்,கொழுப்பு 1.9 கிராம்,கார்போஹைட்ரேடுகள் 44.5 கிராம்,பைபர் 4.3 கிராம்.
வைட்டமின்கள்:தியாமின் 0.243 மில்லிகிராம்,ரிபோஃப்ளேவின் 0.175 மில்லிகிராம்,நியாமின் 1.34 மில்லி கிராம்,பாந்தோதெனிக் அமிலம் 0.554 மில்லிகிராம்,வைட்டமின் பி6 0.497 மில்லி கிராம்.
மினரல்கள்:கால்சியம் 29 மில்லி கிராம்,இரும்பு 0.91 மில்லி கிராம்,மெக்னீசியம் 33 மில்லி கிராம்,பாஸ்பரஸ் 107 மில்லி கிராம்,பொட்டாசியம் 592 மில்லி கிராம்,சோடியம் 2 மில்லி கிராம்,துத்தநாகம் 0.57,தாமிரம் 0.507,மாங்கனிசு 1.18 மில்லிகிராம்.
கஷ்கொட்டையின் தீமைகள்
கஷ்கொட்டை பாதுகாப்பானது ஆனால் அவற்றில் இருக்கும் டானின்களாள் செரிமான கோளாறு மட்டும் வாந்தியை ஏற்படுத்துகிறது.