சியா விதை தீமைகள் |Chia seeds
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் சியா விதை(chia seeds)என்பதனை பற்றி பார்க்க இருக்கிறோம்.பொதுவாக ஒவ்வொரு பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்கும் விதைகள் பலவிதமான மருத்துவ குணங்களை தருகின்றது.சியா விதையில்(chia seeds)இருக்கும் மருத்துவ பயன்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.இந்த சியா விதைகளில்(chia seeds)ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.அது மட்டும் இல்லாமல் இது உடல் எடையை குறைகின்றது மேலும் சர்க்கரை நோய் வராமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.
Chia Seeds In Tamil சியா விதைகள் என்றால் என்ன
சியா விதைகளில்(chia seeds)பல நன்மைகள் இருக்கின்றது.மேலும் இதில் அதிக நார்ச்சத்து இருப்பதனால் தினமும் எப்படி சாப்பிட வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது.இதனைத் தெரிந்து கொண்டால் நமக்கு பாதி சத்துக்கள் கிடைத்துவிடும்.இந்த சியா விதைகளில்(chia seeds)நார்ச்சத்து ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் கால்சியம் போன்றவை இருக்கின்றது.
இந்த சியா விதைகள்(chia seeds)சால்வியா இன்னும் கருப்பு நிற தாவரத்தின் விதை என்று கூறுகின்றன.மேலும் இது புதினா குடும்பத்தைச் சேர்ந்தது.இந்த விதையை பழங்காலங்களில் இருந்து பயன்படுத்தி வருகின்றார்கள்.இதனை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல ஆற்றலை தரும்.மேலும் இதனுடைய நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
சியா விதை தீமைகள்
சியா விதையை(chia seeds)ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும்.இதே போல் சியா விதையை(chia seeds)சாதாரணமாக தனியாக சாப்பிட்டால் விழுங்குவதற்கு சற்று கடினமாக இருக்கும்.இதனால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
உங்களுடைய உணவில் திடீரென்று அதிக நார்ச்சத்து நிறைந்த சியாவை சேர்த்து சாப்பிட்டால் வாய்வு வீக்கம் அல்லது தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.
மேலும் சியா விதையை(chia seeds)வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது இதனை சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு சாப்பிட வேண்டும்.
சியா விதை நன்மைகள்
சியா விதைகள்(chia seeds)இன்றைய கோடை காலத்தில் அதிக பயன்படுத்தும் விதைகளில் ஒன்றாக இருக்கின்றது.சாலை ஓரங்களில் இருக்கும் பல மற்றும் ஜூஸ் கடைகளில் கூட இதனை கலந்திருப்பார்கள்.இது மட்டும் இல்லாமல் சாலட் தயாரிக்கும் பொழுது சியா விதைகளை(chia seeds)சேர்த்து கொள்வார்கள்.இந்த சியா விதையை(chia seeds)தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.இது பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது.இதனைப் பற்றி தற்பொழுது பார்ப்போம்.
நார்ச்சத்து
சியா விதையில்(chia seeds)சுமார் 92 சதவீதம் நார்ச்சத்து இருக்கின்றது.இதனால் மாவுச்சத்து குறைவாக காணப்படுகிறது.இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மையை கொண்டிருக்கிறது.நமது குடலில் இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாவிற்கு உணவாக பயன்படுகின்றது.இதனால் குடலில் இருக்கும் பலவிதமான நோய்களை குணப்படுத்துகின்றது.
இதய நோய்
சியா விதைகளை(chia seeds)சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனடியாக குணமாகும்.குறிப்பாக ரத்தத்தில் இருக்கும் டிரிகிளைசைரைடு கொழுப்பை கரைக்க உதவியாக இருக்கின்றது.உடலில் இருக்கும் உள்ளுறுப்புகளின் வீக்கத்தை குறைக்கவும்,இன்சுலின் சுரப்பியை அதிகரிக்கவும் உதவுகிறது.மேலும் உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பை அதிகரிக்க உதவியாக இருக்கிறது.
எலும்புகள் பலம்
நமது உடலில் இருக்கும் எலும்புகளுக்கு வலுவூட்டக்கூடிய கால்சியம் புரதம் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் சியா விதையில்(chia seeds)அதிகமாக இருக்கின்றது.மேலும் பால் பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு கால்சியம் சத்து கிடைக்க இந்த சியா விதைகள்(chia seeds)உதவியாக இருக்கின்றது.
ஆன்டி ஆக்சிடண்ட்
நம் உடலில் இருக்கும் செல்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய கிருமிகளை அழிக்க சியா விதைகளில்(chia seeds)இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் பயனுள்ளதாக இருக்கின்றது.இது மேலும் வயது முதிர்வை தடுக்கவும் பயன்படுகிறது.
புரத சத்து
சியா விதையில்(chia seeds)அதிகம் புரதச்சத்து நிறைந்து இருக்கின்றது.எனவே இதனை அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு பசி உணர்வு கட்டுப்பாடாக இருக்கின்றது.இதனால் இரவு நேர பசி அல்லது ஸ்னாக்ஸ் சாப்பிடும் ஆசையை கட்டுப்படுத்தி வைக்கின்றது.
ஊட்டச்சத்துக்கள்
சியா விதையின்(chia seeds)ஒரு அவுன்ஸில் 11 கிராம் நார்ச்சத்து,4 கிராம் புரதம்,5 கிராம் ஒமேகா 3ஃபேட்டி ஆசிட் ஆகியவை இருக்கின்றது.இதனைத் தவிர 18% கால்சியம்,30% மெக்னீசியம்,27% பாஸ்பரஸ் போன்றவை இருக்கிறது.மேலும் இதில் வெறும் 137 கலோரிகள் மட்டுமே இருக்கின்றது.
உடல் எடை குறைப்பு
இந்த சியா விதையில்(chia seeds)புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவியாக இருக்கின்றது.இதனை சாப்பிடும் பொழுது வயிறு நிரம்பிய உணவு ஏற்படுகின்றது.
ஒமேகா 3 பேட்டி ஆசிட்
சப்ஜா விதைகளை போலவே சியா விதைகளிலும்(chia seeds)ஒமேகா 3 பேட்டி ஆசிட் அதிகம் இருக்கின்றது.விலங்குகளில் இருந்து கிடைக்கும் ஒமேகா 3 பேட்டி ஆசிட் அளவுக்கு வராது என்றாலும் இதில் இருக்கும் சத்து உடலுக்கு நன்மையை தரக் கூடியதாக தான் இருக்கின்றது.
செரிமான பிரச்சனை
சியா விதையில்(chia seeds)அதிகம் நார்ச்சத்து இருப்பதனால் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது.மேலும் இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவியாக இருக்கிறது.
எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இந்த சியா விதைகளை(chia seeds)சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.இதில் எண்ணற்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருக்கின்றது.மேலும் இது நமது உடலில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட உதவியாக இருக்கும்.