சித்தர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Chittar Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!! வாழ்வில் ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். தூங்கும் போது கனவுகள் வரும். நமக்கு வரும் கனவுகளில் நல்லது நடப்பது போல் வரலாம்,கெட்டது நடப்பது போலும் வரலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
நாம் தூங்கும் போதும் வரும் கனவுகளில் பாம்பு,நாய்,பூனை,மாடு போன்ற உயிரினங்கள் மற்றும் இறந்தவர்கள் இவை அனைத்தும் வருவது வழக்கம்தான் ஒரு சிலருக்கு சித்தர்கள்,சாமியார்கள் வருவார்கள் இப்படி கனவு வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சித்தர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
சித்தர்கள் கனவில் வருவதன் மூலம் யாரும் பயப்படத் தேவையில்லை நீங்கள் இதுவரை செய்த பாவங்களும் இனிமேல் செய்ய போகும் பாவங்களும் நீங்கிவிடும். கடந்த ஜென்மத்தில் ஏதேனும் பாவங்களை செய்து இருந்தால் அந்த பாவங்கள் நீங்கி இந்த ஜென்மத்தில் நீங்கள் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
சித்தர்கள் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வீட்டின் அருகில் உள்ள சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்று வணங்குவது நல்லது.
அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் |
முனிவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
முனிவர்கள் கனவில் வந்தால் யாரும் பயப்படத் தேவையில்லை அவர்கள் உங்கள் கனவில் வருவது நல்லது தான்.முனிவர்கள் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வீடு அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.
ஞானிகள் கனவில் வந்தால் என்ன பலன்
பொதுவாக சித்தர்,முனிவர்,ஞானி,கடவுள்கள் இவர்கள் அனைவரும் நம் கனவில் வருவது நல்லது.அதனால் இவர்கள் கனவில் வந்தால் யாரும் பயப்பட தேவையில்லை.
உங்களுக்கு இவர்கள் கனவில் வருவதன் மூலம் பயம் ஏற்பட்டால் உங்கள் வீட்டின் அருகே உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குங்கள் உங்கள் மனம் நிம்மதி அடையும்.
மகான்கள் கனவில் வந்தால் என்ன பலன்
கனவில் மகான்கள் வந்தால் நீங்கள் இதுவரை எடுத்த முயற்சியில் தோல்வி அடைந்து கொண்டு வந்திருந்தால் இனிமேல் எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
ஐயர் கனவில் வந்தால் என்ன பலன்
ஐயர்,பூசாரி இவர்கள் கனவில் வந்தால் நல்லது தான். ஐயர் கனவில் வந்தால் நல்லது நடக்கும். பூசாரி கனவில் வந்தால் நீங்கள் செய்யும் செயல் பொறுமையாக நடந்து இறுதியில் வெற்றி கிடைக்கும்.
சாமியார் கனவில் வந்தால் என்ன பலன்
சாமியார் கனவில் வந்தால் கனவு காண்பவர் ஏதோ ஒரு காரியத்தை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பார் அந்த காரியத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிப்பார் அதன் மூலம் அவர்களின் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
சிவன் கனவில் வந்தால் என்ன பலன் |
மகாலட்சுமி கனவில் வந்தால் என்ன பலன் |
மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் |
கருடன் கனவில் வந்தால் என்ன பலன் |