நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி கபிலர்மலை சாலையில் வசிப்பவர் ராஜா (44) இவர் தையல் தொழிலை செய்து வருகிறார். அருகில் உள்ள வில்லிபிளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (49) இவர் கூலி வேலை செய்து வருகிறார்.ராஜாவும் கோவிந்தனும் நண்பர்கள்.
இருவரும் கடந்த 27ஆம் தேதி பில்லூர் டாஸ்மார்க் கடையில் மது அருந்த சென்றுள்ளனர்.மது அருந்தி கொண்டிருக்கும்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கோவிந்தன் தனது நண்பனான ராஜாவை கல்லால் தாக்கியுள்ளார்.
படுகாயம் அடைந்த ராஜாவை அப்பகுதியில் இருந்தவர்கள் கோவிந்தனிடமிருந்து காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனிடையில் பரமத்தி போலீசார் கோவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து கோவிந்தனை சிறையில் அடைத்தனர்.
இப்படி இருக்கும் நிலையில் ராஜாவை நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இது நாள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் கோவிந்தனை அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தது நேற்று சிகிச்சை பலனின்றி ராஜா உயிர் இழந்ததால் பரமத்தி போலீசார் கோவிந்தன் மீது அடிதடி வழக்கில் இருந்து கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.