நடிகர் விஜய் கடந்த வருடம் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியிடப்பட்டது என்னதான் அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு வாரிசு படம் முழு திருப்தி அளிக்கவில்லை.விஜய் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.
லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் விஜயா உடன் இணைந்து திரிஷா,சஞ்சய் தத், கௌதம் மேனன்,மன்சூர் அலிகான்,அர்ஜுன்,மிஷ்கின்,பிரியங்கா மோகன் என பல திரைப்பட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
லியோ படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்டர் ப்ரோமோஷன் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தில் இருந்து நான் ரெடி என்ற பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்து கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கடைசி 5 நிமிடத்திற்கு சூர்யாவை நடிக்க வைத்திருப்பார். அது ஒட்டுமொத்த திரையரங்கையை அதிர வைத்த காட்சியாக அந்த படத்திற்கு அமைந்தது.
அதேபோல லியோ படத்திலும் ஒரு ட்விஸ்ட் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக நீண்ட தாடி மற்றும் முடிவுடன் இருந்தவர் திடீரென்று மொட்டை அடித்து ஆளே மாறிவிட்டார். தனுஷ் லியோ படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை பரவலாக தான் பேசப்பட்டு வருகிறது.