தனுஷ் ஒரு இந்திய திரைப்பட நடிகர் பெரும்பாலும் இவர் தென்னிந்தியா மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகராக மட்டுமில்லாமல், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், பாடகர்,பாடலாசிரியர் என திரைத்துறைக்கு தேவையான அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இவர் கடந்த வருடம் நானே வருவேன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து வாத்தி என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த இரண்டு படங்களும் தனுசுக்கு எதிர் பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை தொடர்ந்து இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை தான் தனுஷின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக நீண்ட தாடி மற்றும் முடிவுடன் இருந்த தனுஷ் தற்பொழுது தனது 50 படத்திற்காக மொட்டை அடித்துள்ளார்.
தனுஷின் 50 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் இயக்கி மற்றும் அவரே நடிக்க உள்ளார்.இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.தனுஷின் 50வது படம் வடசென்னை பாணியில் இருக்கும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.