யோகி பாபு ஆரம்பத்தில் படம் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் வில்லன் கூட்டத்தில் ஒரு ஆளாக நடித்து ஒரு சில படங்களில் காமெடி நடிகராக நடித்தும் உள்ளார் இவர் தற்பொழுது ஹீரோவாக நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டும் காமெடி நடிகராக நடித்து வரும் யோகி பாபு தற்போது எம் எஸ் தோனி தயாரிப்பில் எல் ஜி எம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக இருந்த எம் எஸ் தோனி தற்பொழுது படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் ஆனியன் கேப்டனாக செயல்பட்டு வரும் எம் எஸ் தோனிக்கு தமிழகத்தில் அதிக ரசிகர்கள் இருப்பதால் இவர் தமிழில் தனது முதல் படத்தை தயாரித்துள்ளார்.இவர் தயாரித்த எல் ஜி எம் திரைப்படத்தில் யோகி பாபு,ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எல்ஜிஎம் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் எம் எஸ் தோனி கலந்து கொண்டார்.அப்பொழுது எம்.எஸ். தோணியிடம் யோகி பாபு தனக்கு சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளார் அதற்கு பதில் அளித்த எம் எஸ் தோனி கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது ராயுடு தற்பொழுது ஓய்வு பெற்றிருப்பதால் அந்த இடம் காலியாக தான் இருக்கிறது.
அந்த இடத்திற்கு உங்களை அணியில் சேர்த்துக் கொள்கிறோம் என்றும் கூறிவிட்டு அதன் பிறகு நீங்கள் நடிகராக நடித்து வருகிறீர்கள். கிரிக்கெட் விளையாட்டினால் நடிப்பில் உங்களால் கவனம் செலுத்த முடியாது அது மட்டும் இல்லாமல் வேகமாக பந்து வீசுவார்கள் உங்களுக்கு காயங்கள் ஏற்படும் என்று சொல்லியிருந்தார்.யோகி பாபு இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது எம் எஸ் தோனிக்காக மட்டும்தான் என்று சொல்லப்படுகிறது.