பித்தம்
பித்தம் என்பது நீர் மற்றும் நெருப்பின் தன்மைகளை கொண்டிருப்பதாகும் இது உடலின் ஜீரண மண்டலத்தை முறையாக செயல்படுத்த உதவியாக இருக்கிறது.பித்தத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.பித்தத்தன்மை சீராக இருக்கும் பொழுது நோய் எதிர்ப்பு மண்டலமும் ஜீரண மண்டலமும் சிறப்பாக செயல்படக்கூடும்.அதற்கு நாம் தினமும் பயன்படுத்தும் உணவு முறையை சரியாக தேர்வு செய்து சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
பித்தம் எதனால் வருகிறது
இன்றைய காலகட்டத்தில் பல நோய்கள் வருகின்றது அதில் ஒன்று பித்தம் முக்கியமாக இருக்கிறது.இந்த பித்தத்தை குறைக்க உணவில் காரத்தை எண்ணையை குறைக்க வேண்டும்.மேலும் கோழிக்கறியை சாப்பிடுவது குறைக்க வேண்டும்.அதிகமான கோதுமையை சேர்ப்பது கூட பித்தத்தை அதிகரிக்கும்.அரிசியை சாப்பிடும் பொழுது பார்த்து தான் சாப்பிட வேண்டும்.பித்தத்தை குணப்படுத்துவதற்கு கரிசலாங்கண்ணிக் கீரை,கருவேப்பிலை,சீரகம்,தனியா,எலுமிச்சை,மஞ்சள்,இஞ்சி போன்றவற்றை தினமும் சமையலில் பயன்படுத்த வேண்டும்.
பித்தம் அதிகமானால் ஏற்படும் நோய்கள்
உடலில் இருக்கும் பித்தத்தை போக்குவதற்கு ஜீரண மண்டலம் மற்றும் மெட்டாபாலிசத்தை முறைப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது. குடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்த பித்தம் இருக்கின்றது.
- உடலில் பித்தம் அதிகரிக்கும் பொழுது
- ஜீரண கோளாறு
- நெஞ்செரிச்சல்
- டயேரியா
- சரும எரிச்சல்
- சருமத்தில் அரிப்புகளை ஏற்படுத்துதல்
- அதிகமான வியர்வையை வெளிப்படுத்துதல்
- அதிகப்படியான தாகம் ஏற்படுத்துதல்
போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் இந்த பிரச்சினைகள் ஏற்படும் வேறு நோய்கள் அறிவுரைகளாக இருந்தாலும் அது உடலில் பித்தம் சமநிலையில் இல்லாததால் ஏற்படுகின்றது என்றும் கூறலாம்.
பித்தம் குறைய என்ன சாப்பிட வேண்டும்
உணவுப் பொருட்கள்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவு பொருட்களை முறையாக எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.ஆயுர்வேத முறைப்படி நமது உணவு முறையை அமைத்துக் கொள்வது மிகவும் நன்மை.கசப்பு தன்மை கொண்ட உணவுகளையும் இனிப்பு தன்மை கொண்ட உணவுகளையும் எடுத்துக் கொண்டால் உடலில் பித்தத்தின் அளவு குறையும்.
ஆப்பிள்,திராட்சை,சுச்சினி,லெட்டியூஸ்,வெள்ளரிக்காய்,பீன்ஸ்,தேங்காய்,வாட்டர் மெலன்,பால் போன்ற உணவுகள் எடுத்துக் கொண்டால் உடலின் பித்த நிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளாக இருக்கிறது.பித்தத்தை குறைக்க நினைக்கும் பொழுது ஆல்கஹால் எடுத்துக் கொள்வது கண்டிப்பாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதனைப் போல் அதிகமான காப்பி இறைச்சி போன்றவற்றை சாப்பிடக்கூடாது.வருத்த உணவுகள் என்னை அதிகம் உள்ள உணவுகள் உப்பு அதிகம் உள்ள உணவுகள் காரம் மற்றும் புளிப்பு சுவை கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.எலுமிச்சை சாறு கொத்தமல்லி இலை சோம்பு வெந்தயம் போன்றவற்றில் லேசான உப்பின் சுவை இருக்கும் அதனால் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இது போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
வேலை செய்யும் பொழுது ஓய்வெடுத்தல்
உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் வேலை செய்வார்கள்.அப்பொழுது அதிக ஊக்கத்துடன் தங்களுடைய நாளில் பெரும்பாலான நேரத்தை வேலைக்காக மட்டுமே செலவிட்டு கொள்வார்கள்.இப்படிப்பட்டவர்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் சிறிது நேரம் திரையை விட்டு விலகி இருப்பது அவசியமானது.
அது உடலின் அதிகப்படியான பித்தத்தை குறைத்து மன அழுத்தத்தையும் அமைதிப்படுத்துகிறது.வேலையை மறந்து விட்டேன் சுற்றி உள்ள வண்ணமயமான இயற்கையை ரசித்து கற்றுக் கொள்ளுதல் இசையைக் கேட்டல் பிடித்த வேறு விஷயங்களில் மனதை சிறிது நேரம் செலுத்துதல் போன்ற செயல்களை செய்தால் பித்தம் குறைய வாய்ப்புகள் இருக்கிறது.
யோகாசனம்
பகல் நேரங்களில் யோகாசனங்கள் செய்து வந்தால் உடலில் இருக்கும் பித்தத்தை தமிழிலே படுத்துவது மிகவும் கடினமாக ஒன்று.அதனால் அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் யோகாசனங்கள் செய்வது உடலுக்கு முழுமையான பலனை தரும்.
காலநிலை வெப்பமாக இல்லாத நேரங்களில் யோகாசனம் செய்வது நன்மை தரும் குளிர்ச்சியான மாலைப்பொழுதில் யோகாசனம் செய்வதுதான் மிகவும் உண்மை சில குறிப்பிட்ட ஆசனங்கள் உடலின் வித்தத்தை சமநிலையில் வைத்திருக்க உதவியாக இருக்கும்.
குறிப்பாக குழந்தை போஸ் மர்யர்யாசனம் புஜங்காசனம் போன்ற யோகாசனங்கள் செய்தால் உடலில் இருக்கும் பித்தத்தை சமநிலையாக வைத்திருக்கிறது.
இதையும் படிக்கலாமே..