Homeதமிழ்Meaning TamilDizziness Meaning In Tamil-தலைச்சுற்றல் ஏற்படுவது

Dizziness Meaning In Tamil-தலைச்சுற்றல் ஏற்படுவது

Dizziness Meaning In Tamil

தலை சுற்றுதல் என்பது நீங்கள் நின்று கொண்டு இருக்கும் இடத்திலிருந்து மூளை தன் சமநிலையை இழந்து தலை சுழன்று மயக்கம் ஏற்படுகின்றது.இதனால் ஏற்படும் மோசமான உடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாக அமைகின்றது.இதன் மூலம் சில சமயங்களில் குறைந்த ரத்த அழுத்தம்,இதய நோய்,தசை பலவீனம்,வாந்தி,ரத்த சோகை,தலையில் உண்டான காயம்,ஒற்றைத் தலைவலி,உடலின் சர்க்கரை அளவு அதிகரித்தல்,பக்கவாதம்,காதுகளில் உண்டான தொற்று,மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

- Advertisement -

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும்,சில மருந்துகளின் பக்க விளைவுகளாலும் தலைசுற்றல் ஏற்படுகிறது.சிலருக்கு அதிகம் உடற்பயிற்சி செய்வதால் மார்பில் வலி உண்டாகும் பதட்டம் அதிகரிக்கும் போது தலைச்சுற்றல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது.தலைச்சுற்றல் காரணமாக சிலர் வாந்தி எடுப்பார்கள் மேலும் அவர்களின் உடல் பலவீனம் அடைந்து விடும் மேலும் இந்த தலைச்சுற்றலை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

dizziness in tamil

Dizziness Reasons

நம் உடலில் எப்போ எந்த நோய் வரும் என்று யாராலும் கூற முடியாது நம் உடல் முற்றிலும் ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் இருப்பவர் திடீரென்று மயங்கி விழுவார்கள்.இது ஏன் நடக்கிறது என்று நாம் பலமுறை யோசித்து உள்ளோம்.ஒரு நபருக்கு திடீரென்று மயக்கம் வந்தால் அதில் சில பொது காரணங்கள் இருக்கின்றது.அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

இதய நோய்

இதய நோய் உங்களுடைய மூளைக்கு செல்லும் ரத்த விநியோகத்தை பாதிக்கின்றது.இதனால் மயக்கம் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அமைகிறது.இந்த வகையான மயக்கம் மருத்துவத்தில் கார்டியாக் சின்கோ என்று அழைக்கப்படுகின்றது.

- Advertisement -

நீரிழிவு நோய்

மனித உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் கூட அதனால் சுயநினைவை இழந்து விடக் கூடும்.ரத்தத்தில் திரவம் இல்லாததால் ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது இதனால் மயக்கம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.

- Advertisement -

இரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் குறைந்து இருப்பதனால் மயக்கத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது.உடலில் ரத்த ஓட்டம் சரியாக ஏங்காத போது மயக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்திய கூறுகள் ஏற்படுகின்றது.இந்தப் பிரச்சனை பெரும்பாலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இடம் காணப்படுகின்றது.

சர்க்கரை நோய்

நீரிழிவு நோய்களுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சினை அதிகமாக இருக்கும்.ஏனெனில் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும் பிரச்சினை இருக்கும் இதனால் நீரிழிவு அதிகம் ஆபத்து இருக்கின்றது.இதனுடைய காரணமாக தலை சுற்றல் ஏற்படுகிறது.

Dizziness Symptoms

தலை சுற்றுதல் ஒரு தெளிவில்லாத அறிகுறியாகவும் நீங்கள் சரியாக உணர்கிறீர்கள் என்பதை உங்கள் மருத்துவருக்கு விளக்குவது கடினமாக இருக்கும் இதுபோன்று உணரலாம் என்று கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

  • படிச்சிருக்கும் நிலையில் இருந்து எழுந்து நின்ற உடனே உங்கள் சமநிலையை இழந்து விடுவீர்கள்.
  • நீங்கள் நிலையாக நிற்க முடியாத போது கீழே விழுந்து விடுவீர்கள்.
  • நீங்கள் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது கூட நகர்வது போன்று ஒரு உணர்வு ஏற்படும்.
  • நீங்கள் எந்த நேரத்திலும் மயங்கி விடுவீர்கள் என்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.இது போன்ற அறிகுறிகள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

dizziness in tamil

Dizziness Treatment

தலைச்சுற்றல் எந்த மருத்துவமும் இல்லாமல் தானாகவே சரியாகும் ஒருவேளை அப்படி சரியாகவில்லை என்றால் உடலில் ஏற்படும்.பிரச்சினையினால் கூட தலைச்சுற்றலுக்கு காரணமாக அமைகின்றது.பரிசோதனை மற்றும் சோதனைகளுக்குப் பிறகு தலைச்சுற்றலுக்கான காரணத்தை உங்கள் மருத்துவர் கண்டறிந்து.அதற்கு சிகிச்சை அளிப்பதிலும் உதவும் சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது.ஒருவேளை அது தொடர்ந்து நடந்தால் உங்கள் மருத்துவர் சிலர் மருந்துகள் மற்றும் பயிற்சிகளை தெரிவிப்பார்கள்.

  • பயணத்தின் போது ஏற்படும் தலைச்சுற்றலில் பயணத்திற்கு அரை மணி நேரம் முன்னால் உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியபடி தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்வது நல்லது அது போன்ற ஒரு நிலைகளில் ஹிஸ்டைமன் எதிர்ப்பு மருந்துகள் உதவியாக இருக்கும்.
  • குறைந்த ரத்த சக்கரையின் காரணமாக கூட தலைசுற்றல் ஏற்படும் ரத்த சர்க்கரை அளவுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சிகிச்சை அளிக்க முடிகிறது. குறைந்த ஆரோக்கியமான உணவு விலை குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கும்.
  • ஒற்றைத் தலைவலியின் காரணமாக தலைச்சுற்றல் ஏற்படும் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒற்றை தலைவலி எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரை செய்வார்கள்.
  • குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக கூட தலைச்சுற்றல் ஏற்படும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உங்கள் ரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பிறகு தலைச்சுற்றலை குறைக்க முடியும் நரம்பு வலி செலுத்தப்படும் திரவங்கள் கூட அவசியமாக இருக்கும்.
  • மதுவின் நச்சுத்தன்மை காரணமாக கூட தலைச்சுற்றல் வரும் உங்கள் மருத்துவர் மதுவின் பாதிப்பை நீக்குவதற்காக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெறுவது நல்லது.
  • உங்கள் காதில் இருக்கும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகளை பரிந்துரைச் செய்யலாம் மேலும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சைக்குக்கும் பரிந்துரைக்க செய்யலாம்.
  • இதெல்லாம் தவிர ஏதேனும் ஒரு மருந்தின் பக்க விளைவின் காரணமாக தலைச்சுற்றல் ஏற்படும் உங்கள் மருத்துவர் அந்த மருந்தை குறைத்துக் கொள்ள சொல்வார்கள் அதனை குறைத்துக் கொள்ள வேண்டும்.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR